ஜப்பானில் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கிற்கு மோட்டோஜிபி அடையாளத்தை கொடுத்த சுசுகி நிறுவனம்...

சுசுகி நிறுவனம் 2020 ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கை மோட்டோஜிபி அடையாளத்துடன் ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. சுசுகியின் இந்த புதிய 125சிசி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானில் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கிற்கு மோட்டோஜிபி அடையாளத்தை கொடுத்த சுசுகி நிறுவனம்...

சுசுகி நிறுவனம் தற்சமயம் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கை ட்ரிட்டோன் ப்ளூ மெட்டாலிக், ப்ரில்லியண்ட் வொய்ட் மற்றும் டைட்டான் ப்ளாக் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்து வருகிறது. தற்போது புதியதாக மோட்டோஜிபி தோற்றத்திலும் இந்த பைக் அறிமுகமாகிவிட்டதால் நான்கு நிறங்களில் ஜப்பானில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

ஜப்பானில் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கிற்கு மோட்டோஜிபி அடையாளத்தை கொடுத்த சுசுகி நிறுவனம்...

மோட்டோஜிபி தோற்றத்திலான இந்த புதிய பைக்கின் விலை அங்கு 3,93,800 யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதே விலையில் தான் மற்ற மூன்று நிறங்களில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.

ஜப்பானில் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கிற்கு மோட்டோஜிபி அடையாளத்தை கொடுத்த சுசுகி நிறுவனம்...

அடுத்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜப்பானில் விற்பனையை துவங்கவுள்ள இந்த மோட்டோஜிபி லீவரி பைக்கை நிறுவனத்தின் 100வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானில் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கிற்கு மோட்டோஜிபி அடையாளத்தை கொடுத்த சுசுகி நிறுவனம்...

சுசுகி எக்ஸ்டார் குழுவின் சமீபத்திய ஜிஎஸ்எக்ஸ்-ஆர்ஆர் மோட்டோஜிபி ரேஸ் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய லீவரி பைக்கில் நீலம் மற்றும் சில்வர் நிறத்தில் பெயிண்ட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கிற்கு மோட்டோஜிபி அடையாளத்தை கொடுத்த சுசுகி நிறுவனம்...

இந்த புதிய நிறத்தேர்வை தவிர்த்து இந்த பைக்கில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கில் 124சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின், டிஒஎச்சி செட்அப் மற்றும் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் பொருத்தப்படுகிறது.

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 15 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 125சிசி-ல் முன்னதாக இந்நிறுவனம் ஸ்விஷ் ஸ்கூட்டர் மாடலை சில தினங்களுக்கு முன் ஜப்பானில் அறிமுகப்படுத்தி இருந்தது.

ஜப்பானில் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கிற்கு மோட்டோஜிபி அடையாளத்தை கொடுத்த சுசுகி நிறுவனம்...

கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக விளங்குகின்ற ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக்கில் ஜிக்ஸெர் பைக்குகளின் முன்புற பகுதி, எல்இடி டெயில்லேம்ப், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் கியர் பொஷிஷன் இண்டிகேட்டர் உடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களை சுசுகி நிறுவனம் வழங்கி வருகிறது.

Most Read Articles

English summary
2020 Suzuki GSX-R125 launched with new MotoGP livery in Japan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X