Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய நிறத்தேர்வுகளுடன் 2020 சுசுகி ஸ்விஷ் 125 ஸ்கூட்டர் தைவானில் அறிமுகம்.. இந்திய சந்தைக்கு வருமா?
2020 சுசுகி ஸ்விஷ் 125 ஸ்கூட்டர் மாடல் தைவான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நிறத்தேர்வுகளையும் வசதிகளையும் பெற்றுள்ள இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இதன் முந்தைய வெர்சன் நீலம் மற்றும் கருப்பு நிறத்தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 மாடல் இந்த நிறத்தேர்வுகளுடன் கூடுதலாக நீல நிற அலாய் சக்கரங்களுடன் நீலம்/சில்வர், கருப்பு அலாய் சக்கரங்களுடன் பாதி-வெள்ளை மற்றும் சிவப்பு அலாய் சக்கரங்களுடன் சிவப்பு/கருப்பு என்ற பெயிண்ட் அமைப்புகளையும் ஏற்றுள்ளது.

புதிய நிறத்தேர்வுகளுடன் 2020 ஸ்விஷ் 125 ஸ்கூட்டருக்கு துணை கிராஃபிக்ஸையும் சுசுகி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த கூடுதல் கிராஃபிக்ஸ் ஸ்கூட்டரின் மொத்த தோற்றத்தையும் மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தொழிற்நுட்ப அம்சங்களாக ட்யூல்-த்ரோட்டல் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரின் த்ரோட்டல் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் சவுகரியமாக்குகிறது. இவற்றுடன் ஒரு பொத்தானை அழுத்தினாலே என்ஜின் ஸ்டார்ட் ஆகும் வகையில் சுசுகியின் எளிய ஸ்டார்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

முழு-டிஜிட்டல் தரத்தில் உள்ள இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரானது ஆரஞ்ச் நிறத்தில் பின்னணி லைட்டிங் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஸ்கூட்டரின் வேகம், எரிபொருள் திறன், எரிபொருள் கேஜ், நேரம், என்ஜின் ஆயில் சேன்ஞ் ரிமைண்டர் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.

எக்ஸாஸ்ட் அமைப்பானது 2020 ஸ்விஷ் ஸ்கூட்டரில் கருப்பு நிறத்தில் 3டி செவ்வக வடிவ அவுட்லெட்களுடன் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் உள்ளது. ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் எல்இடி தரத்திலும், முன்புற சாக்கெட்டாக யுஎஸ்பி சாக்கெட்டையும் இந்த 2020 ஸ்கூட்டரில் சுசுகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இவை மட்டுமின்றி ஆண்டி-ஸ்கிட் ப்ளேட் ஃப்ளோர்போர்டு, பெரிய அளவில் இருக்கை அடியில் சேமிப்பிடம், ஸ்போர்ட்டி பில்லன் க்ராப் ரெயில், RAM ஏர் இண்டேக், 3 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் உள்ளது.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2020 ஸ்விஷ் 125 ஸ்கூட்டரில் 124சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜினை சுசுகி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 9.4 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்-ல் 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த என்ஜின் அமைப்பானது ஜப்பானிய ப்ராண்ட்டான சுசுகியின் ஈக்கோ தொழிற்நுட்பத்துடன் உள்ளதால் அதிக எரிபொருள் திறன் உறுதியளிக்கப்படுகிறது. தைவானில் இந்த ஸ்கூட்டர் மாடலின் விலை 79,800 நியூ தைவான் டாலர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.2,04,536 ஆகும்.