2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2020 டைகர் 900 பைக் மாடலின் டெலிவிரி பணிகளை இந்தியாவில் சில டீலர்ஷிப்களில் துவங்கியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களின் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...

ட்ரையம்ப்பின் லேட்டஸ்ட் மிடில்வெய்ட் அட்வென்ஜெர் டூரர் பைக் மாடலாக உருவாகியுள்ள 2020 டைகர் 900 பைக்கானது இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி அறிமுகமானது. கடந்த சில வாரங்களாக டீலர்ஷிப்களை இந்த பைக் சென்றடைந்துவரும் நிலையில் தற்போது சில ஷோரூம்களில் டெலிவிரிகள் துவங்கியுள்ளன.

2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...

இதனால் 2020 டைகர் 900 பைக்கை முன்பதிவு செய்தவர்களில் சிலர் தங்களது பைக்குகளை வீட்டிற்கு ஓட்டி சென்றனர். இந்த பைக்கின் எண்ட்ரீ-லெவல் ஜிடி வேரியண்ட்டின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.13.7 லட்ச ரூபாய் ஆகவும், ராலி மற்றும் ராலி ப்ரோ வேரியண்ட்களின் விலைகள் ரூ.14.35 மற்றும் ரூ.15.50 லட்சங்களாக உள்ளன.

2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...

இதில் ஒவ்வொரு வேரியண்ட்டிற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது ஜிடி வேரியண்ட் நகர்புற சாலைகளுக்கு மிகவும் ஏற்றதாக விளங்கும். இதில் அலாய் சக்கரங்கள் மற்றும் குறுகிய சஸ்பென்ஷன் ட்ராவல் வழங்கப்பட்டுள்ளது.

2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...

அதேநேரம் இந்த சஸ்பென்ஷன் அமைப்பு ரேலி வேரியண்ட்களில் சற்று பெரியதாக வழங்கப்பட்டுள்ளன. ஆஃப்-ரோட்டிற்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இதன் ரேலி வேரியண்ட்கள் ட்யூல்லெஸ் டயருடன் ஸ்போக் அலாய் சக்கரங்கள் மற்றும் நீண்ட சஸ்பென்ஷன் ட்ராவலை பெற்றுள்ளன.

2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...

இரு பைக்குகளும் பொதுவாக முழு-எல்இடி லைட்டிங், 7-இன்ச் டிஎஃப்டி திரை, கார்னரிங் ஏபிஏஸ், ஐஎம்யு உடன் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஹீட்டட் க்ரிப்கள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளன.

2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...

இந்த மூன்று வேரியண்ட்களிலும் 888சிசி, இன்லைன் 3-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, 12-வால்வு, டிஒஎச்சி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 93.9 பிஎச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ட்ரையம்ப்பின் இந்த 900சிசி பைக்கிற்கு போட்டியாக டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950, பிஎம்டபிள்யூ எஃப் 850 ஜிஎஸ் மற்றும் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் உள்ளிட்ட பைக் மாடல்கள் உள்ளன.

Most Read Articles
English summary
2020 Triumph Tiger 900 deliveries begin in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X