எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் எஃப்இசட்25 பைக் மாடலின் அப்டேட் வெர்சன்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் இந்த புதிய பைக்குகளை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

இந்த தகவல்களில் கூடுதலாக எஃப்இசட்எஸ் 25 பைக்கும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் எஃப்இசட்25 பைக்கை காட்டிலும் கூடுதலான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எஃப்இசட்எஸ்25 மாடலுக்கு பிஎஸ்6 எம்டி-15 பைக்கில் வழங்கப்பட்டிருந்த வெள்ளை வெர்மிலியன், பாடினா க்ரீன் மற்றும் டார்க் மேட் ப்ளூ என்ற மூன்று நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

இந்த நிறத்தேர்வுகளில் பாடினா க்ரீன் மற்றும் டார்க் மேட் ப்ளூ பெயிண்ட் அமைப்புகளில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தங்க நிறத்தில் சக்கரங்களும், வெள்ளை வெர்மிலியன் நிறத்தேர்வில், கருப்பு நிறத்தில் சக்கரம் மற்றும் சிவப்பு நிறத்தில் ஸ்ட்ரிப் பேண்ட்டும் கொடுக்கப்படவுள்ளன.

எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

ஃபஸெர் 25 பைக் மாடலை போல் அல்லாமல் எஃப்இசட்25 பைக்கிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இதன் புதிய பிஎஸ்6 வெர்சன் அதே கொள்ளளவில் பெட்ரோல் டேங்க், தரையிலிருந்து இருக்கையின் உயரம், டயர்களின் அளவு உள்ளிட்டவற்றை அப்படியே பெற்றுள்ளது.

எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

ஃபஸெர் 25 பைக்கின் விற்பனையை இந்தியாவில் ஏற்கனவே நிறுத்திவிட்ட யமஹா நிறுவனம், 2020 எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25 பைக்கில் இரட்டை செயல்பாட்டை கொண்ட எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் உள்ளிட்டவற்றை பொருத்தியுள்ளது.

எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

எஃப்இசட்எஸ்25 பிஎஸ்6 பைக் கூடுதலாக அளவில் பெரிய விண்ட்ஷீல்டு மற்றும் பைக்குடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு தட்டுகளை பெற்றுள்ளது. இந்த இரு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களிலும் ஏரோடைனாமிக்ஸ் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளதால், அதிவேகத்தில் பைக்கை இயக்கும்போதும் ரைடர்களுக்கு தேவையான பேலன்ஸ் கிடைக்கும்.

எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

ப்ரஷ் கார்ட்ஸ், குளிரான இடத்தில் இருந்து மட்டுமில்லாமல், விபத்து நேரங்களிலும் ஓட்டுனரின் கைகளை பாதுகாக்கும். செயல்படுதிறனை பொறுத்தவரையில், இந்த இரு பைக்குகளிலும் வழக்கமான 249சிசி என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை பைக்கிற்கு வழங்கக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

இதனால் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25 பைக்குகள் அதிகப்பட்சமாக அதே 20.8 பிஎச்பி பவர் மற்றும் 20.1 என்எம் டார்க் திறனில் தான் இயங்கவுள்ளன. இந்த பைக்குகளில் நிலையாக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. மற்றப்படி இவ்விரு பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை யமஹா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

எஃப்இசட்எஸ்25 பைக் சற்று ப்ரீமியமாக உள்ளதால், எஃப்இசட்25 பைக்கை காட்டிலும் சிறிது கூடுதலான விலையை பெறவுள்ளது. இந்திய சந்தையில் 250சிசி பைக் பிரிவில் கடுமையான போட்டி நிலவி வருவதால், யமஹா நிறுவனம் மாடர்ன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விதமான தொழிற்நுட்பங்களையும் இந்த இரு புதிய பைக்குகளிலும் வழங்கியிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Soon-Launching 2020 Yamaha FZ25 And FZS 25 Details Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X