என்ஜினில் முக்கிய அப்கிரேட் உடன் ஹோண்டாவின் 2021 சிபி125ஆர் பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சர்வதேச சந்தைக்கான 2021 சிபி125ஆர் பைக்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

என்ஜினில் முக்கிய அப்கிரேட் உடன் ஹோண்டாவின் 2021 சிபி125ஆர் பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா!

சிறிய ரக சிபி நாக்டு ஸ்ட்ரீட் பைக்கான சிபி125ஆர் 2021ஆம் ஆண்டிற்காக என்ஜினில் மிக முக்கியமான அப்கிரேட்களை பெற்றுள்ளது. அதாவது, யூரோ-5க்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டது மட்டுமில்லாமல் என்ஜின் வழங்கக்கூடிய ஆற்றல் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்ஜினில் முக்கிய அப்கிரேட் உடன் ஹோண்டாவின் 2021 சிபி125ஆர் பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா!

மாசு உமிழ்வு விதி கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் அதிக எச்பி பவர்களை பெறுவதற்காக, ஹோண்டா நிறுவனம் என்ஜினின் ஸ்ட்ரோக் நீளத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்பு 58மிமீ X 48.4மிமீ என்றிருந்த போர் மற்றும் ஸ்ட்ரோக்கின் அளவுகள் தற்போது 57.3மிமீ X 48.4மிமீ என்ற அளவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

என்ஜினில் முக்கிய அப்கிரேட் உடன் ஹோண்டாவின் 2021 சிபி125ஆர் பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா!

இதன் விளைவாக என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் 1.6 பிஎச்பி-ல் இருந்து 14.67 பிஎச்பி ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் ஒப்பீட்டு விகிதம் 11:1-ல் இருந்து 11:3:1 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்லெட் டக்ட், காற்று சுத்திகரிப்பானை இணைக்கும் குழாய் மற்றும் ரெசனேட்டர் உள்ளிட்டவை என்ஜினில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள மற்ற பாகங்கள் ஆகும்.

என்ஜினில் முக்கிய அப்கிரேட் உடன் ஹோண்டாவின் 2021 சிபி125ஆர் பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா!

என்ஜின் மட்டுமின்றி சிபி125ஆர் பைக்கின் வன்பொருளான டாப்-நாட்ச் 41மிமீ ஷோவா பெரிய பிஸ்டன் தலைக்கீழான ஃபோர்க்குகளையும் ஹோண்டா நிறுவனம் அப்கிரேட் செய்துள்ளது. மற்றப்படி முன்சக்கரத்தில் நிஸின் காலிபர் உடன் 296மிமீ டிஸ்க் மற்றும் பின்சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

என்ஜினில் முக்கிய அப்கிரேட் உடன் ஹோண்டாவின் 2021 சிபி125ஆர் பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா!

அதேபோல் சிபி125ஆர் பைக்கின் ‘நியோ ஸ்போர்ட்ஸ் கேஃப்' டிசைனிலும் ஹோண்டா நிறுவனம் கை வைக்கவில்லை. இதன் விலை விற்பனை செய்யப்படும் மற்ற நாட்டு சந்தைகளில் மிக அதிகமாக உள்ளதால் இந்திய சந்தைக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

என்ஜினில் முக்கிய அப்கிரேட் உடன் ஹோண்டாவின் 2021 சிபி125ஆர் பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா!

ஆனால் உண்மையில் இவ்வாறான தோற்றத்தை கொண்ட 125சிசி நாக்டு மோட்டார்சைக்கிள் நம் நாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது எனது கருத்து. இந்திய எக்ஸ்ஷோரூம் விலையை மட்டும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கவனமாக பார்த்து நிர்ணயித்தால் கேடிஎம் 125சிசி பைக்குகளுக்கு டஃப் கொடுக்கலாம்.

Most Read Articles
English summary
2021 Honda CB125R breaks cover; makes more power
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X