Just In
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 1 hr ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- 3 hrs ago
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
Don't Miss!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Finance
எங்கே? எப்போது? யார்?.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..!
- Sports
பெருமையா இருக்கு.. நட்டுவை கொண்டாடும் மக்கள்.. ஆஸி.யிலிருந்து திரும்பிய சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்போதே தொடங்கியது 2021 கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கான புக்கிங்... எப்போது விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்?
2021 கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கான புக்கிங் இப்போதே தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

இந்திய இளைஞர்களின் நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் பைக்குகளில் கேடிஎம் நிறுவனத்தின் 125 ட்யூக் பைக்கும் ஒன்று. 2021 மாடலாக விரைவில் அறிமுகமாக இருக்கும் இப்-பைக்கிற்கான புக்கிங் இப்போதே தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இத்துடன், அது வெளியிட்டுள்ள தகவலில். இந்த பைக் புதிய டிசைன் மற்றும் வசதிகளுடன் அறிமுகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலைதான் இப்பதிவில் காணவிருக்கின்றோம்.

2021 கேடிஎம் 125 ட்யூக்கின் டிசைன் மாற்றங்கள்:
பலவிதமான அப்டேட்டுகளை கேடிஎம் 125 ட்யூக் பெற்றிருக்கின்றது. இதனால், தற்போது விற்பனையில் இருக்கும் கேடிஎம் ட்யூக் 200 பைக்கைப் போல் இது காட்சியளிக்கின்றது. ஹெட்லைட், ப்யூவல் டேங்க், டேங்க் எக்ஸ்டென்ஷன்கள், வால் பகுதி பேனல்கள் மற்றும் எல்சிடி தரத்திலான திரைகள் உள்ளிட்டவை 200 ட்யூக்கிற்கு இணையாக மாற்றப்பட்டிருப்பதால் இத்தகைய தோற்றத்தை 125 ட்யூக் பெற்றிருக்கின்றது.

இரு பைக்குகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை தெளிவுப்படுத்தும் விதமாக வண்ணத்தில் மாற்றங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புதிய நிறம் நிச்சயம் இந்திய இளைஞர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப, ப்யூவல் டேங்க் மற்றும் பிற கூறுகளுக்கு வெவ்வேறு விதமான நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சேஸிஸ்:
125 ட்யூக் பைக்கை முன்பைவிட மிகவும் ஷார்ப்பானதாகவும், முரட்டுத் தனமானதாகவும் கட்டமைப்பதற்கு ஏற்ற வகையில் இதன் சேஸிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ட்ரெல்லிஸ் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே ஃபிரேம்தான் முந்தைய மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து, வீல், பிரேக், யுஎஸ்டி ஃபோர்க் (முன்பக்க சஸ்பென்ஷன்) மற்றும் மோனோஷாக் அப்சார்பர் (பின்பக்க சஸ்பென்ஷன்) உள்ளிட்டவையும் முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே அம்சங்களாக காட்சியளிக்கின்றன.

எஞ்ஜின்:
கேடிஎம் 125 ட்யூக் பைக்கில் இடம்பெற்றிருக்கும் எஞ்ஜின் 124 சிசி திறன் கொண்டதாகும். இது லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின். அதிகபட்சமாக 14.5 எச்பி மற்றும் 12 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனை இந்த எஞ்ஜின் கொண்டிருக்கின்றது. இது 6 ஸ்பீடு வேகக்கட்டுப்பாடு கருவியில் இயங்குகின்றது.

விலை:
புதிய ஸ்டைலைப் பெற்றமைக்காக கேடிஎம் 125 ட்யூக் லேசான விலையுயர்வைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வரை கிடைக்கவில்லை. இருப்பினும் ரூ. 5 ஆயிரம் விலையுயர்வில் இந்த பைக் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இப்பைக்கிற்கான புக்கிங் நடைபெற்று வருகிறது. இது இந்த மாதம் முடிவிற்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பு: முதல் படத்தைத் தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.