Just In
- 8 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 11 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. கோர்ட்டுக்கு வந்த இளம் பெண்.. ரகசிய வாக்குமூலம்.. சிக்கப்போவது யார்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூப்பரான வசதிகளுடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக் அறிமுகம்!
அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் கூடுதலாக இடம்பெற்றுள்ள சிறப்பு தொழில்நுட்ப வசதிகள், விலை உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் அப்பாச்சி வரிசை பைக் மாடல்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. டிசைன், தொழில்நுட்பம், விலை என அனைத்திலும் இளைஞர்களை அப்பாச்சி வரிசை பைக் மாடல்கள் வெகுவாக கவர்ந்துள்ளன. அண்மையில் அப்பாச்சி பைக் மாடல்களின் மொத்த விற்பனை 4 மில்லியன் என்ற புதிய மைல்கல்லை கடந்து புதிய சாதனை படைத்தது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அவ்வப்போது அப்பாச்சி பைக் மாடல்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அப்பாச்சி வரிசையில் முன்னணி மாடலாக இருக்கும் ஆர்டிஆர் 200 4வி பைக் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய மாடல் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2021 மாடலாக அறிமுகமாகி இருக்கும் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.31 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் தேர்விலும் கிடைக்கும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் மிக முக்கிய அம்சமாக மூன்று விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. ஸ்போர்ட், அர்பன், ரெயின் என்ற இந்த மூன்று டிரைவிங் மோடுகளும் வெவ்வேறு சீதோஷ்ண நிலை மற்றும் சாலை நிலைகளில் பயன்படுத்தும் வகையில் உள்ளன. பைக் செல்லும்போதே ரைடிங் மோடுகளை மாற்றும் வசதி உள்ளது.

மேலும், இதன் ரக பைக்குகளில் முதல்முறையாக அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய முன்புற சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரின் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் புளூடூத் இணைப்பு வசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், எளிதாக ஸ்டார்ட் செய்வதற்கான ஃபெதர் டச் ஸ்டார்ட் பொத்தான் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் முன்பைவிட 1 கிலோ எடை குறைந்துள்ளது. இதனால், செயல்திறனும், பிரேக் செயல்திறனும் மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருப்பதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. இந்த புதிய மாடலில் முன்புறத்தில் ஷோவா பெர்ஃபார்மென்ஸ் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் இருப்பதால், பந்தய களங்களில் மிகச் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்கில் 197.75சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரேஸ் பைக்குகளுக்கான விசேஷ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இதன் எஞ்சினில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் அதிகபட்சமாக 20.4 பிஎஸ் பவரையும், 16.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் குறைவான வேகத்தில் செல்வதற்கு வசதியான க்ளைடு த்ரூ என்ற தொழில்நுட்பமும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய அப்பாச்சி 200 4வி பைக்கில் மேட் ஃபினிஷ் செய்யப்ப்ட புதிய நீல வண்ணத் தேர்விலும் வந்துள்ளது. ரேஸ் பைக்குகள் போன்ற புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், எல்இடி ஹெட்லைட், புதிய டிசைனில் சாவியும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதன் ரதத்தில் அதிக மதிப்புமிக்க வசதிகளுடன் போட்டி போடுகிறது புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்.

புதிய அப்பாச்சி 200 பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. புக்கிங் செய்பவர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கி இருக்கின்றன.