என்னது 100 மிலி-க்கே இத்தனை கி.மீட்டாரா..? புதிய ஹோண்டா ஆக்டிவா 125 எவ்வளவு மைலேஜ் வழங்கும்? வீடியோ!

ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

இந்தியர்களில் பெரும்பாலானோர் பட்ஜெட் ரக வாகன விரும்பிகளாக இருக்கின்றனர். அதேசமயம், ஆடம்பர ரக வாகனங்கள் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக, ஓர் விலையுயர்ந்த வாகனத்தை வாங்கும்போது, அந்த விலைக்கேற்ற தகுதியை அந்த வாகனம் பெற்றிருக்கின்றதா என்பவதில் இந்தியர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

இதன்காரணமாகவே, குறிப்பிட்ட லக்சூரி கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. அந்தவகையில் ஸ்கூட்டர், பைக், கார் என எந்த வாகனத்தை வாங்கினாலும் அதன்மீது தனிப்பட்ட எதிர்பார்ப்பை இந்தியர்கள் வைக்கின்றனர். இதனாலயே, ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியர்களுக்கென பிரத்யேக மாடலை தயாரித்து அறிமுகம் செய்து வருகின்றனர்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

குறிப்பாக, இந்தியர்களின் கவனம் வாகனத்தின் ஸ்டைல், வசதி மற்றும் எரிபொருள் பயன்பாடு (மைலேஜ்) ஆகியவற்றின் மீதே அதிகம் காணப்படுகின்றது. அதிலும், மைலேஜ் விஷயத்தில் இந்தியர்கள் கராரானவர்களாக இருக்கின்றனர்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

இதற்கு, இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதிலிருந்து இந்தியர்களைத் தப்பிக்க வைப்பதற்கு அண்மையில் அறிமுகமான ஹோண்டாவின் புத்தம் புதிய பிஎஸ்-6 தரத்திலான ஆக்டிவா 125 ஸ்கூட்டர் உதவும் என்பதனை விளக்குகின்ற வகையிலான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

இதனை, ஆப் கே வ்லாக்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இதில், புதிதாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் மைலேஜ் குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் இந்தியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற வகையிலான ரிசல்ட் கிடைத்துள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

ஆம், ஸ்கூட்டரில் வெறும் 100 மில்லிலிட்டர் பெட்ரோல் ஊற்றி இயக்கப்பட்டதில் சராசரியாக 7 கிமீ தூரம் வரை புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் பயணித்துள்ளது. அதிக மக்கள் தொகை நிறைந்த சாலையில் பயணித்தபோதே இந்த மைலேஜ் கிடைத்துள்ளது. ஒரு வேலை நீண்ட தூர சாலைகளில் செல்லும்போது இதைவிட கூடுதல் மைலேஜ் புதிய ஆக்டிவா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், மணிக்கு 40 கிமீ வேகத்திற்கும் குறைவாகவே இந்த ஸ்கூட்டர் இயக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

தற்போது கிடைத்திருக்கும் இந்த தகவலை வைத்து பார்க்கையில் இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிமீ தூரம் வரை செல்லும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இது இப்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் பிஎஸ்-6 அல்லாத ஆக்டிவா ஸ்கூட்டரைக் காட்டிலும் அதிக மைலேஜ் ஆகும். பழைய மாடல் ஆக்டிவா 60-க்கும் குறைவான மைலேஜையே வழங்கி வருகின்றது.

புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் அதிக மைலேஜை வழங்குவதற்காக ப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிக எரிபொருள் பயன்பாட்டை தடுப்பதுடன், வெளியேற்றப்படும் மாசின் அளவையும் குறைக்கின்றது. இதுமட்டுமின்றி பல்வேறு மாற்றங்களைப் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

அந்தவகையில், இந்த ஸ்கூட்டரின் தோற்றத்தில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய ஸ்டைலைக் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப், குரோம் பூச்சு கொண்ட முகப்பு மற்றும் பின்பக்க பகுதி உள்ளிட்டவை ஸ்கூட்டருக்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

இதுமட்டுமின்றி, ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரையும் கவர்கின்ற வகையில், அனைவரும் இயக்குவதற்கான வசதி மற்றும் வாய்ப்புகள் இந்த ஸ்கூட்டரில் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை ஸ்டாண்டர்டு, அலாய் மற்றும் டீலக்ஸ் ஆகும். இதில், ஸ்டாண்டர்டு ரூ. 67,490-க்கும், அலாய் வேரியண்ட் 70,990-க்கும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ. 74,490 என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும்...? வீடியோ ஆதாரம்..!

இந்த ஸ்கூட்டரில் 125சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
All New Honda Activa 125 BS6 mileage Test Video. Read In Tamil.
Story first published: Friday, January 24, 2020, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X