கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

மோட்டார்சைக்கிள், கடந்த 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் வாகனம் ஆகும். இந்த 100 ஆண்டுகளில் மோட்டார்சைக்கிளை வைத்தும் அவற்றின் தயாரிக்கும் நிறுவனங்களிலும் பல அற்புதமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*1887ல் யமஹா பியானோ தயாரிப்பு நிறுவனமாக களம்புகுந்து தற்போது பியானோ, படகுகள், கார் என்ஜின்கள், நீச்சல் குளங்கள், தொழிற்சாலை ரோபோட்கள், சக்கர நாற்காலிகள், எலக்ட்ரிக்ன்ஸ் மற்றும் மோட்டர்சைக்கிள்கள் உள்பட பல தயாரிப்புகளில் ஈடுப்பட்டு வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*மோட்டார்சைக்கிள்களுக்கு பின்னால் அமர்ந்தப்படி இந்தியாவை சேர்ந்த திபயன் சௌத்ரி என்பவர் சுமார் 202 கிமீ தூரம் வரையில் பயணம் செய்துள்ளார்.

*ரேசிங் குழுவின் சின்னமாக பன்றி இருந்ததால் முந்தைய காலங்களில் உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹார்லி டேவிட்சன் ‘ஹோக்' என்ற அழைக்கப்பட்டுவந்தது.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*உலகின் மோட்டார்சைக்கிள் ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னோடியான அராய் 1926ல் துவங்கப்பட்டது.

*உலகின் நீளமான மோட்டார்சைக்கிள் குஜராத்தில் 2015ல் தயாரிக்கப்பட்டது. பஜாஜ் மோட்டார்சைக்கிளில் கொண்டுவரப்பட்ட இந்த நீளமான மோட்டார்சைக்கிளின் நீளம் 86 அடி 3 இன்ச் (26.29 மீட்டர்) ஆகும்.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*2016ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மோட்டார்சைக்கிள் சாலை விபத்துகளில் இறந்தவர்களில் 92 சதவீதத்தினரில் சுமார் 68 சதவீதத்தினர் பெண்கள் என்ற அதிர்ச்சிகர புள்ளிவிபரங்கள் வெளியாகின.

*1907ல் இருந்து நடைபெற்றுவரும் உலகின் மிகவும் அபாயகரமான மோட்டார்சைக்கிள் போட்டியான ஐல் ஆஃப் மேன் டி.டி-இல் 215 kmph என்ற வேகத்தில் 17 நிமிடங்களில் லேப்-ஐ அடைந்ததுதான் தற்போதுவரையில் சாதனையாக உள்ளது. இந்த போட்டி பொது சாலையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*தற்போதைய காலக்கட்டத்தில் மோட்டார்சைக்கிள்களின் டயர்களில் இயற்கை ரப்பர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நீண்ட ஆயுட்காலத்திற்காகவும், ட்ராக்‌ஷனிற்காகவும் செயற்கை ரப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

*1946ல் ஹோண்டா புஷ் பைக்குகளை தயாரிக்க ஆரம்பித்தது. அவற்றில் 50சிசி ஜெனரேட்டர் என்ஜின்கள் பொருத்தப்பட்டன. அதன்பின் சுமார் 46 வருடங்களுக்கு பிறகு அதிகளவில் பாகங்களை கொண்ட ஹோண்டா என்ஆர்750 பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*சுஸுகி 1900ல் ஜவுளி துறைக்காக நெசவு தறிகளை தயாரிக்க ஜப்பானில் துவங்கியது. அதன்பின் 1930களில் சிறிய அளவிலான கார்களை தயாரிக்க ஆரம்பித்த இந்நிறுவனம் 1952ல் தனது முதல் மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிளை பவர் ஃப்ரீ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.

*2010 ஆம் ஆண்டில், ராக்கி ராபின்சன் ஒரு ஸ்ட்ரீம்லைனர் வடிவ மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி அமெரிக்கா, உட்டாவில் உள்ள புகழ்பெற்ற பொன்னேவில் சால்ட் பிளாட்ஸில் மணிக்கு 376 மைல் வேகத்தில் இயக்கி உலக சாதனை படைத்தார்.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*2006இல் அமெரிக்க வட கரோலினாவில் ஒரு நபர் தனது ஹார்லி-டேவிட்சன் பைக்கை தனது சொந்த இடத்தில் புதைத்து திருடப்பட்டதாகக் கூறினார். திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுக்காக அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது, மேலும் அவரது கடனும் செலுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் அந்த இடத்தை வாங்கிய வேறொரு நபர் மோட்டார் சைக்கிள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டுப்பிடித்தார்.

*2008க்கு முன்னர், மோட்டார்சைக்கிள் ஒன்றை அதிகப்பட்சமாக 29 வருடங்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் இந்த வரம்பு 50 ஆக மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*24 மணி நேரத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று மிக நீண்ட தூரமாக 2023.5 மைல்கள் (3256.5 கிலோமீட்டர்) இயக்கப்பட்டுள்ளது. இது 2014 அக்டோபர் 8 அன்று தென்னாப்பிரிக்காவின் வெல்கோமில் உள்ள பாகிசா ஃப்ரீவேயில் "புஷி" என்ற பட்டப்பெயர் கொண்ட மத்தேயு மெக்கெல்வி என்பவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

*‘தி கிரேட் எஸ்கேப்' திரைப்படத்தில் ஸ்டீவ் மெக்வீனின் புகழ்பெற்ற 65 அடி மோட்டார்சைக்கிள் ஜம்ப் சாகசத்தை நிகழ்த்தியவர் பட் எக்கின்ஸால் என்கிற ரைடர் ஆவார். இதனை அவர் ஒரே டேக்கில் செய்தார் என்பதுதான் இதில் சிறப்பம்சமே.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*ஈஸி ரைடர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, படப்பிடிப்பிற்காக பீட்டர் ஃபோண்டா கேப்டன் அமெரிக்கா ஜாக்கெட்டை அணிந்து லாஸ் ஏஞ்சல்ஸை சுற்றி ஒரு வாரம் பயணம் செய்தார். அப்போது ஜாக்கெட்டின் பின்புறமும் பைக்கின் பெட்ரோல் டேங்கில் இருந்த அமெரிக்கக் கொடியினால் பல முறை போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

*மோட்டார் சைக்கிள்கள் மட்டுமின்றி, கவாஸாகி நிறுவனம் தனிப்பட்ட வாட்டர் கிராஃப்ட், கப்பல்கள், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமான உபகரணங்கள், டிராக்டர்கள், ரயில்கள், ஹெலிகாப்டர்கள், ஜெட் என்ஜின்கள், ஏவுகணைகள் மற்றும் விண்வெளி ராக்கெட்டுகளையும் தயாரிக்கிறது.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*டாட்ஜ் டோமாஹாக் என்ற பெயரில் வைப்பர் வி-10 எஞ்சினுடன் மோட்டார்சைக்கிள் மாடல் ஒன்றை ஒன்பது யூனிட்கள் உருவாக்கி பிரபல ஆட்டோமொபைல் நிறுவனம் விற்பனை செய்தது. முன் மற்றும் பின்புறத்தில் 20 இன்ச் சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள் அதிகப்பட்சமாக 500 குதிரைத்திறனில் (பிஎச்பி) இயங்கக்கூடியதாக இருந்தது. இதன் ஒன்பது யூனிட்களும் ரூ.3.7 கோடியில் இருந்து ரூ.5.2 கோடி வரையில் விற்கப்பட்டன.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*உலகின் மிக நீளமான மோட்டார்சைக்கிள் குதித்தல் சாதனை ஆஸ்திரேலியா, மெல்போர்னில் நிகழ்த்தப்பட்டது. 346 அடி உயர இந்த குதித்தல் தான் தற்போதுவரையில் உலக சாதனையாக உள்ளது.

*உலகிலேயே மிக நீண்ட ஆண்டுகளாக, சுமார் 10 வருடங்களாக எமிலியோ ஸ்கோட்டோ என்பவர் மோட்டார்சைக்கிள் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். 279 நாடுகளை பார்வையிட்ட அவரது மோட்டார்சைக்கிள் 4,57,000 மைல்கள் தூரம் பயணம் செய்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா!! சுருக்கமாக இதோ!

*ஒரு மோட்டார் சைக்கிளின் 100mph க்கும் அதிகமான வேகத்தை விளம்பரப்படுத்திய முதல் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த ப்ரோ சுப்பீரியர் ஆகும். 1924ஆம் ஆண்டில் அதன் எஸ்எஸ்100 மோட்டார்சைக்கிளுக்காக அந்த விளம்பரம் வெளிவந்தது.இன்றும் புதுமையான மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களாகக் கருதப்படும் ப்ரோ மோட்டார்சைக்கிள்கள்தான் முதன்முதலில் தேவையான ஸ்டாண்டுகள், இரட்டை ஹெட்லைட்கள், க்ராஷ் பார்கள், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சைலன்சர்கள் மற்றும் 1000சிசி வி-இரட்டை என்ஜின்கள் பொருத்தப்பட்ட பைக்குகளாகும். ஒவ்வொரு எஸ்எஸ்100 பைக்கும் பொது சாலைகளில் 100 மைல் வேகத்தை எட்ட முடியுமா என்று சோதிக்கப்பட்டது. அவ்வாறு செய்யாவிட்டால், அந்த பைக்குகள் உடனடியாக தொழிற்சாலைக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Amazing Motorcycle facts fun to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X