முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய ஆன்லைன் புக்கிங் ப்ரோகிராம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வரும் க்ரீவ்ஸ் காட்டன் லிமிடேட் நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் பிரபலமான ப்ராண்ட் ஆக உள்ளது. இந்நிறுவனம் எலக்ட்ரிக் மற்றும் பசுமை மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் பத்து வருடத்திற்கு மேலான அனுபவத்தை கொண்டு உள்ளது.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

இந்நாள் வரை கிட்டத்தட்ட 50,000 ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் விற்றுள்ள இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 200க்கும் அதிகமான சில்லறை விற்பனை மையங்கள் மூலம் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

இந்தியாவில் பசுமை போக்குவரத்தை கொண்டுவருவதில் தீவிரமாக உள்ள க்ரீவ்ஸ் நிறுவனம் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் வாங்கும் விதமாக ஆன்லைன் முன்பதிவு செயல்முறையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

ஏனெனில் தற்சமயம் உலகின் வல்லரசு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் மக்களை தனிமைப்படுத்தும் விதமாக ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றன. இந்தியாவில் ஊரடங்கு அடுத்த மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

மேலும் அரசாங்கத்தின் சார்பில் மக்கள் அனைவரும் ஊரடங்கையும், சமூக இடைவெளியையும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை மனதில் வைத்து கொண்டு தான் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆன்லைன் புக்கிங்கை துவங்கியுள்ளது.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

இந்த செயல்முறையின் மூலம் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் ஆம்பியர் ஸ்கூட்டர்களை வாங்குவது மட்டுமில்லாமல், மற்றொரு சிறப்பம்சமாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொகையை மட்டும் புக்கிங் நேரத்தில் செலுத்தினால் போதும். ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

ஸ்கூட்டருக்கான மீதி பணம் டெலிவிரி நேரத்தில் வசூலிக்கப்படும். ஆனால் இதன் டெலிவிரிகள் தற்சமயம் அமலில் உள்ள ஊரடங்கு திரும்ப பெற்ற பின்பே துவங்கவுள்ளன. அதேநேரம் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான 'தொடர்பில்லா' டெலிவிரி மற்றும் வாகன சுத்திகரிப்பு முறைகள் ஊரடங்கு முடிந்த பின்பும் தொடரவுள்ளன.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பெரும்பாலும் உணவு மற்றும் மருத்துவ பொருட்களை டெலிவிரி செய்பவர்கள் தான் உபயோகப்படுத்தி வருகின்றனர். இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவது 12 மரக்கன்றுகளை நடுவதற்கு சமம் என்ற கருத்து சந்தையில் பொதுவாகவே உள்ளது.

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

ஏனெனில் ஆம்பியர் போன்ற எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் டன் கணக்கில் எரிபொருள் பயன்பாட்டையும் மாசுவையும் கட்டுப்படுத்துகின்றன. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களின் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை காட்டிலும் 85-90 சதவீத செலவை மிச்சப்படுத்த இயலும் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இந்த புதிய ஆன்லைன் புக்கிங் செயல்முறைக்கு முன்பாக கொரோனோ வைரஸை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்களுக்காக ஸ்பெஷல் தள்ளுப்படிகளை க்ரீவ்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் புக்கிங் வசதி தற்போதைக்கு சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புனே போன்ற முக்கியமான நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கவுள்ளது

முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...

க்ரீவ்ஸ் ப்ராண்டின் பிரபலமான இ-ஸ்கூட்டர் மாடலான ஆம்பியர் ஜியல் ஸ்கூட்டரில் 1.2kW ப்ரஷ்லெஸ் டிசி ஹப் மோட்டார், 1.8kWk லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. 75 கிலோ எடை கொண்டதாக உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் 75 கிமீ தூரமும், அதிகப்பட்சமாக 50 kmph என்ற வேகத்திலும் இயங்கக்கூடியது.

இதன் பேட்டரியின் சார்ஜை 0%-லிருந்து முழுவதும் நிரப்ப 6 மணிநேரங்கள் தேவைப்படும். அதேபோல் அதிகப்பட்சமாக 50kmph வேகத்தில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் மாடலை 6 வினாடிகளுக்கு முன்பாக டாப்பிங் செய்வதன் மூலமாக 55 kmph என்ற வேகத்திலும் இயக்க முடியும். எக்னோமிக் மற்றும் ஸ்பீடு என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.67,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Ampere Electric Scooter Bookings Payments
Story first published: Saturday, April 18, 2020, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X