எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!

ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள் எதிர்பார்த்திராத அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆம்பியர் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் 10.41 சதவீத பங்கினைக் கொண்டிருக்கின்றது. தரமான தயாரிப்பு, குறைந்த விலை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் இவ்விடத்தை ஆம்பியர் பிடித்திருக்கின்றது.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

ஆம்பியர் நிறுவனம் தற்போது, அதன் வரிசையில் ஜூல், மேக்னஸ், வி48, ரியோ மற்றும் ரியோ எலைட் ஆகிய தேர்வுகளை விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இவற்றில் சில லீட் ஆசிட் பேட்டரியையும், சில லித்தியம் அயன் பேட்டரியையும் கொண்ட மின்சார ஸ்கூட்டர்களாக இருக்கின்றன. நாட்டின் 180 நகரங்களில் 250 விற்பனையாளர்கள் வாயிலாக இந்த ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டு வருகின்றன.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

இதில், மேக்னஸ் மற்றும் ஜூல் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிலையில், தற்போது கிடைத்து வரும் வரவேற்பினை கணிசமாக அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஆம்பியர் நிறுவனம் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது. அதாவது, இந்திய சந்தையில் தனக்கு ஏற்பட்டு வரும் டிமாண்டினை விரிவாக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்புகளில் புதிதாக சில சிறப்பு அம்சங்களை ஆம்பியர் சேர்த்திருக்கின்றது.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

ரியோ, மேக்னஸ், வி48 மற்றும் ஜூல் ஆகிய மாடல் மின்சார ஸ்கூட்டர்களே புதிய அம்சங்களைப் பெற்ற வாகனங்களாக மாறியிருக்கின்றன. எந்தெந்த மாடலில் என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

ஆம்பியர் ஜூல் இஎக்ஸ் (Ampere Zeal EX)

ஆம்பியர் நிறுவனத்தின் புதிய வருவுகளில் இதுவும் ஒன்றாகும். ரூ. 66,949 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஃபேம்2 திட்டத்தின்கீழ் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 18 ஆயிரத்தை அரசு மானியம் வழங்குகின்றது. இந்த மின்சார ஸ்கூட்டரைதான் ஆம்பியர் நிறுவனம் தற்போது முன்பைக் காட்டிலும் 10 சதவீத அதிக ரேஞ்ஜை வழங்கும் மாடலாக மாற்றியிருக்கின்றது.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

மேலும், முன்பைக் காட்டிலும் ஸ்மூத்தாக செல்லும் திறனும் தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது. இவையனைத்தையும் மேம்படுத்துதலின் வாயிலாக ஆம்பியர் வழங்கியிருக்கின்றது. இத்துடன், இந்த ஸ்கூட்டருக்கு ரிமோட் சாவி, அலாரம் (திருட்டை தடுக்க), யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவையும் சிறப்பு வசதிகளாக வழங்கப்படுகின்றது.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

இந்த மின்சார ஸ்கூட்டரில் 60வோல்ட், 30ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகின்றது. இது, 1200 பிஎல்டிசி மின் மோட்டாருக்கு தேவையான திறனை வழங்கும். இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்து பயணித்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

ஆம்பியர் ரியோ பிளஸ் எல்ஏ (Ampere Reo Plus LA)

ஆம்பியர் ரியோ பிளஸ் எல்ஏ மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 42,490 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மின்சார ஸ்கூட்டரில் சிறப்பு வசதிகளாக யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் இக்னிஷன் ஸ்டார்ட் பொத்தான் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இந்த மின்சார ஸ்கூட்டரில் 48வோல்ட் 27 ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கின்றது.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 55கிமீ முதல் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த மின்சார ஸ்கூட்டரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 145மிமீ ஆகும். இதேபோன்று வீல்பேஸ் 1235 மிமீ ஆகும். இதில் டிரம் பிரேக் அம்சமே வழங்கப்படுகின்றது.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

ஆம்பியர் மேக்னஸ்

ஆம்பியர் நிறுவனம் மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றே இந்த மேக்னஸ். இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 49,999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் புத்தம் புதிய ஸ்டைல் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் இந்தியாவின் பிரபலமான மின்சார ஸ்கூட்டராக இதை உயர்த்தியிருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர்தற்போது அதிக ரேஞ்ஜை வழங்கும் சிறப்பு வசதியைப் பெற்றிருக்கின்றது.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

மணிக்கு 25 கிமீ எனும் வேகத்தில் இயங்கக்கூடிய இந்த மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக 60கிமீ முதல் 65 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதுவே, இந்த மின்சார ஸ்கூட்டரில் செய்யப்பட்ட புதிய மாற்றமாக இருக்கின்றது.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

ஆம்பியர் வி48

வி48 மின்சார எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிதாக ட்யூப் லெஸ் டயர் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை ரூ. 36,190 ஆகும். இது ஆம்பியர் நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்களிலேயே ஆரம்பநிலை மாடல் ஆகும்.

எதிர்பார்த்திராத அம்சங்களுடன் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்கள்... அய்யோ இப்போவே ஒன்றை வாங்கனும் போல் இருக்கே!!

ஆம்பியர் வி48 மின்சார ஸ்கூட்டரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் வரவேற்தக்க மாற்றமாகும். கிராமப்புறங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வரும் மின்சார ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த நிலையில், யாரும் எதிர்பார்த்திரா வசதிகளாக ட்யூப் லெஸ் டயர் மற்றும் எல்இடி மின் விளக்கு வசதி இந்த மின்சார ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டிருப்பதை கூடுதல் டிமாண்டை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Ampere Launches New Electric Scooter Variants: Gets Added Features, Improved Range & More. Read In Tamil.
Story first published: Thursday, October 1, 2020, 14:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X