மிகவும் குறைவான எடை கொண்ட அப்ரில்லாவின் 660சிசி பைக்குகள்!! 2021ல் இந்தியாவில் அறிமுகமாகுகிறது

அப்ரில்லா பிராண்டின் ஆர்எஸ்660 & டுவோனோ660 பைக்குகளின் இந்திய அறிமுகம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகவும் குறைவான எடை கொண்ட அப்ரில்லாவின் 660சிசி பைக்குகள்!! 2021ல் இந்தியாவில் அறிமுகமாகுகிறது

பீரிமியம் தரத்திலான மிடில்-வெய்ட் பிரிவில் அப்ரில்லா ஆர்எஸ்660 மற்றும் டுவோனோ660 பைக்குகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பைக்குகளாக உள்ளன. இந்த நிலையில்தான் தற்போது இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகமாகலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைவான எடை கொண்ட அப்ரில்லாவின் 660சிசி பைக்குகள்!! 2021ல் இந்தியாவில் அறிமுகமாகுகிறது

இதனை இந்தியாவில் அப்ரில்லா பிராண்டை சொந்தமாக கொண்டுள்ள பியாஜியோ வாகன ப்ரைவேட் நிறுவனத்தின் சிஇஒ-வும் நிர்வாக இயக்குனருமான டியாகோ கிராஃபி உறுதிப்படுத்தியுள்ளார். இதில் ஆர்எஸ்660 பைக்கின் விபரங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுவிட்டன.

மிகவும் குறைவான எடை கொண்ட அப்ரில்லாவின் 660சிசி பைக்குகள்!! 2021ல் இந்தியாவில் அறிமுகமாகுகிறது

டுவோனோ 660 பைக்கை பற்றிய விபரங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. நமக்கு தெரிந்தவரை இரண்டிற்கும் இடையே பாகங்கள் மற்றும் வசதிகளில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. தோற்றத்தில் சிறிய அளவில் மாற்றம் இருக்கும்.

மிகவும் குறைவான எடை கொண்ட அப்ரில்லாவின் 660சிசி பைக்குகள்!! 2021ல் இந்தியாவில் அறிமுகமாகுகிறது

அதேபோல் ஆர்எஸ்660 பைக்கை காட்டிலும் டுவோனோ 660 பைக்கில் என்ஜின், சற்று குறைவான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படலாம். அப்ரில்லா ஆர்எஸ்660, அதன் பெரிய தோற்றம் கொண்ட முன்னோடியான ஆர்எஸ்வி4 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைவான எடை கொண்ட அப்ரில்லாவின் 660சிசி பைக்குகள்!! 2021ல் இந்தியாவில் அறிமுகமாகுகிறது

குறிப்பாக ஆர்எஸ்660 பைக்கின் பின்பகுதி ஆர்எஸ்வி4 பைக்கை பெரிய அளவில் ஒத்து காணப்படுகிறது. என்ஜின் அமைப்பும் ஆர்எஸ்வி4-ல் இருந்து தான் ஆர்எஸ்660 பைக்கிற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த பைக்கில் 660சிசி, இணையான-இரட்டை என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைவான எடை கொண்ட அப்ரில்லாவின் 660சிசி பைக்குகள்!! 2021ல் இந்தியாவில் அறிமுகமாகுகிறது

இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-ல் 100 பிஎச்பி மற்றும் 8,500 ஆர்பிஎம்-ல் 67 என்எம் டார்க் திறனை பெற முடியும். இந்த என்ஜின் ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்660 பைக்கின் எடை வெறும் 165 கிலோ மட்டும்தான் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

மிகவும் குறைவான எடை கொண்ட அப்ரில்லாவின் 660சிசி பைக்குகள்!! 2021ல் இந்தியாவில் அறிமுகமாகுகிறது

அப்ரில்லா பிராண்டு இந்த இரு மோட்டார்சைக்கிள்களின் இறக்குமதியில் இந்திய அரசாங்கத்தின் புதிய இறக்குமதி விதிமுறையை பயன்படுத்தவுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி எந்தவொரு நிறுவனமும் வருடத்திற்கு 2,500 வாகனங்களை தனித்தனியான ஒத்திசைவு இல்லாமல் இந்தியாவில் இறக்குமதி செய்யலாம்.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia RS 660, Tuono 660 to be launched in India by mid-2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X