அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான அப்ரில்லா, ஸ்ட்ரோம் 125, எஸ்ஆர் 125 மற்றும் எஸ்ஆர் 160 உள்ளிட்ட ஸ்கூட்டர்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

தற்சமயம் வெளிவந்துள்ள மேற்கூறப்பட்ட ஸ்கூட்டர்களின் விலை மதிப்புகள் நேரடியாக டீலர்களிடம் இருந்து பெற்றவை ஆகும். இந்த தகவலில் இருந்து அப்ரில்லா நிறுவனம் தனது அனைத்து பிஎஸ்6 ஸ்கூட்டர்களையும் அதிகப்படியான விலையில் சந்தைப்படுத்தவுள்ளதை அறிய முடிகிறது.

அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

எந்த அளவிற்கு என்றால், அப்ரில்லா நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த ஸ்கூட்டர்கள் அனைத்தின் விலையும் குறைந்தது ரூ.18,000 வரையிலாவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

இந்த வகையில் அதிகப்பட்சமாக எஸ்ஆர் 160 கார்பன் பிஎஸ்6 ஸ்கூட்டர் ரூ.19,441-ஐ அதன் பிஎஸ்4 வெர்சனில் இருந்து விலை அதிகரிப்பாக பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் எஸ்ஆர் 160 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் 19,417 ரூபாய் விலை உயர்வுடன் உள்ளது.

Model BS6 Price BS4 Price Difference
Storm 125 Rs 86,638 Rs 67,942 Rs 18,696
SR 125 Rs 92,181 Rs 73,691 Rs 18,490
SR 160 Rs 104,476 Rs 85,059 Rs 19,417
SR 160 Carbon Rs 107,570 Rs 88,129 Rs 19,441
SR 160 Race Rs 113,671 Rs 94,305 Rs 19,366
அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

அடுத்து எஸ்ஆர் 160 மாடலின் பிஎஸ்6 ரேஸ் வெர்சன் தற்போதைய தலைமுறை ஸ்கூட்டரை விட ரூ.19,366 அதிகமாக விற்பனை செய்யப்படவுள்ளது. அப்ரில்லாவின் எஸ்ஆர் 125 பிஎஸ்6, ஸ்ட்ரோம் 125 பிஎஸ்6 என்ற 125சிசி ஸ்கூட்டர்கள் முறையே ரூ.18,490 மற்றும் ரூ.18,696-ஐ விலை உயர்வாக பெற்றுள்ளன.

அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

விலை உயர்வுக்கு ஏற்றாற் போல் இந்த ஸ்கூட்டர்களின் டிசைன் அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்றால், இல்லை. ஆனால் இதன் விற்பனை மாடலில் ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்கள் எல்இடி தரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

அதேபோல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் புதிய டிசைனில் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனை ஸ்கூட்டருடன் இணைத்து கொள்ள முடியும். இதற்காக பிரத்யேக செயலி ஒன்றையும் அப்ரில்லா நிறுவனம் இணையத்தில் கொண்டுவரவுள்ளது.

அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

அப்ரில்லா 125சிசி ஸ்கூட்டர்களின் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகள் பிஎஸ்6 மாற்றத்தால் தற்போதைய பிஎஸ்4 மாடலில் இருந்து பெரிய அளவில் மாற்றத்தை பெறவில்லை. மற்ற 160சிசி ஸ்கூட்டர்கள் தான் சிறிது கூடுதலான இயக்க ஆற்றலை பெற்றுள்ளன.

எஸ்ஆர் 160, எஸ்ஆர் 160 கார்பன், எஸ்ஆர் 160 ரேஸ் உள்ளிட்ட 160சிசி ஸ்கூட்டர்களில் உள்ள 160சிசி ஃப்யூல்-இன்ஜெக்டட், 3-வால்வு என்ஜின் அதிகப்பட்சமாக 7,600 ஆர்பிஎம்-ல் 10.7 பிஎச்பி பவர் மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 11.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

அப்ரில்லா நிறுவனத்தின் இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு சென்றடைய துவங்கியுள்ளதால் இவற்றிற்கான முன்பதிவுகளும் ஆரம்பமாகியுள்ளன. இதற்கிடையில் இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ள தயாரிப்பு மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அப்ரில்லா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளியாகவுள்ள எஸ்ஆர் 160 ஸ்கூட்டர்களின் அறிமுகம் வருகிற ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள்ளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia Storm 125, SR 125 and SR 160 BS6 prices revealed Table Code
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more