ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

ஏப்ரிலியா எஸ்எக்ஸஆர் 125 மேக்ஸி ரக ஸ்கூட்டரின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை மிக வலுவாக இருந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு ரகங்களிலும் ஸ்கூட்டர் மாடல்கள் வரிசை கட்டி வருகின்றன. இந்த நிலையில், ஐரோப்பிய சந்தையில் பிரபலமான மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு இருசக்கர வாகன நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

இந்த ரகத்தில் முதலாவதாக வந்த சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருக்கு கிடைத்த வரவேற்பு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்து, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஏப்ரிலியா நிறுவனம் எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரண்டு பைக் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

அசத்தலான தோற்றத்திலும், சிறப்பம்சங்களையும் கொண்ட இந்த ஸ்கூட்டர்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த ஸ்கூட்டர்களின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரின் அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஸிக் வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதேபோன்று, எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் அறிமுகமும் இந்த ஆண்டு இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் மேக்ஸி ரகத்தில் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டுள்ளன. எஞ்சின் திறன் மட்டுமே மாறுபடுகிறது. எல்இடி ஹெட்லைட், ட்வின் எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்கள், முன்புற டிஸ்க் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

இந்த ஸ்கூட்டர்களில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்பிளிட் க்ளவ்பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜர், பெரிய விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு, அகலமான இருக்கை அமைப்பு ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய 125 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பிஎஸ்6 அம்சம் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும் பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இரண்டு சக்கரங்களுக்கும் ஒருங்கிணைந்த பிரேக் தொழில்நுட்பமும் உள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போகிறது

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டர் விலை மற்றும் எஞ்சின் திறன் அடிப்படையில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருடன் போட்டி போடும். விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது, இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வாக அமையும்.

Most Read Articles
மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
The Aprilia SXR 125 scooters launch has been delayed in the Indian market. The company has pushed the launch of the upcoming maxi-scooters to early next-year due to the on-going COVID-19 pandemic and the subsequent lockdown announced in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X