மிரட்டும் தோரணையுடன் ஏப்ரிலியாவின் புதிய 'மேக்ஸி' ஸ்கூட்டர்... ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஏப்ரிலியா நிறுவனத்தின் புத்தம் புதிய எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டரின் படங்கள், சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்

இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான சந்தை வலுவானதாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரம்மாண்டமான தோற்றத்தை பெற்றிருக்கும் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மவுசு கூடி வருகிறது. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் மூலமாக நிரூபணமாகி உள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்

மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு இந்தியர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் ஏப்ரிலியா நிறுவனம் புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை இன்று ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்தது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்

சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டரை விட இந்த புதிய ஸ்கூட்டர் மிக பிரம்மாண்டமான முகப்புத் தோற்றத்தை பெற்றிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், பெரிய விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு ஆகியவற்றுடன் மிரட்டுகிறது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த ஸ்கூட்டரில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அகலமான ஃபுட்போர்டு, வசதியான இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். முன்புற அப்ரான் பகுதியில் விசேஷ ஸ்டோரேஜ் அறையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கேயே மொபைல் சார்ஜரும் உள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஏப்ரிலியா எஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 160 சிசி எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11 பிஎஸ் பவரையும், 11.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வந்துள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குககள் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த ஸ்கூட்டரில் 12 அங்குல மெஷின் கட் அலாய் வீல்கள் உள்ளன. 120/70 செக்ஷன் டயர்கள் இரண்டு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்

தற்போது இந்த ஸ்கூட்டருக்கு நேரடியாக எந்த போட்டியாளரும் இல்லை. ஆனால், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மற்றும் கிம்கோ எக்ஸ்-டவுன் 300ஐ ஆகிய மாடல்கள் இதே மேக்ஸி ரகத்தை சேர்ந்த மாடல்களாக இருக்கின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Italian premium two wheeler maker, Aprilia has unveiled SXR 160 maxi style scooter at auto expo.
Story first published: Thursday, February 6, 2020, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X