இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

அப்ரில்லா பிராண்ட் எஸ்ஆர் 125 ஸ்கூட்டர் மாடலின் விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரில்லா தற்சமயம் 125சிசி-ல் இருந்து 160சிசி வரையிலான ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதில் 125சிசி ஸ்கூட்டர் என்று பார்த்தால், எஸ்ஆர் 125 மற்றும் ஸ்ட்ரோம் என்ற இரண்டு மட்டும் தான் உள்ளன.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

ஆனால் அதிலும் ஒன்று குறைக்கும் விதமாக எஸ்ஆர் 125 ஸ்கூட்டரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படவுள்ளதாக ஜிக்வீல்ஸ் செய்தி தளம் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனால் விரைவில் இந்த ஸ்கூட்டரின் பெயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

அப்ரில்லா எஸ்ஆர் 125 மற்றும் அப்ரில்லா ஸ்ட்ரோம் ஸ்கூட்டர் மாடல்களுக்கு இடையேயான புறக்கணிக்கத்தக்க விலை வேறுபாடே விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த விற்பனை நிறுத்தத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

அதாவது எஸ்ஆர் 125 மற்றும் ஸ்ட்ரோம் ஸ்கூட்டர்களின் விலைகள் எக்ஸ்ஷோரூமில் ரூ.87,082 மற்றும் ரூ.92,602 என்ற அளவில் உள்ளன. இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 5.5 ஆயிரம் ரூபாய் தான். இதனால் வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வு ஸ்ட்ரோம் மீதே உள்ளது.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

அதுமட்டுமில்லாமல் அப்ரில்லா பிராண்ட் சமீபத்தில் தான் ஸ்ட்ரோம் ஸ்கூட்டரின் பலத்தை கூட்டும் விதமாக அதன் புதிய டிஸ்க் வேரியண்ட்டை ரூ.95,148 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் எதிர்காலத்தில் சந்தையில் 125சிசி பிரிவில் அப்ரில்லா நிறுவனத்தில் இருந்து ஸ்ட்ரோம் மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

இருப்பினும் ‘எஸ்ஆர்' என்ற பெயர் ஸ்கூட்டருக்கு ப்ரீமியம் உணர்வை வழங்குவதால் அதனை தயாரிப்பு நிறுவனம் விட்டுவிடும் எண்ணத்திலும் இல்லை. அப்ரில்லா எஸ்ஆர் 125 தற்சமயம் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

இந்த இரு வேரியண்ட்களிலும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை தவிர்த்து வேறெந்த வித்தியாசமும் இல்லை. எஸ்ஆர் 125-ல் பொருத்தப்படும் 125சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 7750 ஆர்பிஎம்-ல் 9.8 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்-ல் 9.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் என்ஜினை பெறுகின்ற இந்த 125சிசி ஸ்கூட்டரின் முன்புறத்தில் இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பு வழங்கப்படுகிறது. இதனுடன் டர்ன் இண்டிகேட்டர்கள் ஹேண்டில்பாரின் கௌலில் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் மோனோ-ஷாக் செட்அப்-ஐயும் பெற்று வருகின்ற இந்த ஸ்கூட்டர் மாடலில் ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் டிஸ்க் ப்ரேக்கும், பின் சக்கரத்தில் ட்ரம் ப்ரேக்கும் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

இவற்றுடன் இணைக்கப்பட்ட ப்ரேக்கிங் சிஸ்டமும் (சிபிஎஸ்) இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது. இதன் 12 இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன. இதுவே இந்த ஸ்கூட்டரில் பயணம் செய்பவர்களுக்கு சிறப்பான ஹேண்ட்லிங்கை வழங்குகிறது.

இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா எஸ்ஆர்125... விற்பனை நிறுத்தப்படுகிறதா...?

இந்திய சந்தையில் தற்போதைக்கு விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டராக விளங்கும் எஸ்ஆர் 125-ன் விற்பனை நிறுத்துவது குறித்து அப்ரில்லா நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

அதேநேரம் இந்த ஸ்கூட்டரின் விற்பனை நிறுத்தப்பட்டு எஸ்ஆர் பெயரை தொடர்ந்து பயன்படுத்த இந்நிறுவனம் விரும்பினால், அப்ரில்லா எஸ்ஆர் 160 போன்ற ஆற்றல்மிக்க மாடல்களை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia SR 125 To Be Discontinued Soon666
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X