மெர்சலாக்கும் அஸ்டன் மார்ட்டின் சூப்பர் பைக்... இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

அஸ்டன் மார்ட்டின் மற்றும் பிராக் சுப்பீரியர் இணைந்து உருவாக்கி இருக்கும் புதிய சூப்பர் பைக் மாடல் பந்தய களத்தில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 மெர்சலாக்கும் அஸ்டன் மார்ட்டின் சூப்பர் பைக்... இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலகின் பிரபலமான நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் பந்தய களத்தில் இயக்குவதற்கான புதிய சூப்பர் பைக் மாடலை இங்கிலாந்தை சேர்ந்த பிராக் சுப்பீரியர் மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. AMP- 001 என்ற பெயரிடப்பட்டு இருக்கும் இந்த மோடடார்சைக்கிள் கள சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

 மெர்சலாக்கும் அஸ்டன் மார்ட்டின் சூப்பர் பைக்... இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

பிரான்ஸ் நாட்டிலுள்ள பவ்- அர்னாஸ் பந்தய களத்தில்வைத்து சோதனை செய்யப்பட்டு வரும் ஏஎம்பி 001 சூப்பர் பைக்கின் வீடியோ ஒன்றை அஸ்டன் மார்ட்டின் வெளியிட்டுள்ளது. அதில், இந்த சூப்பர் பைக் மிகவும் தனித்துவமான டிசைனுடன் கவர்கிறது.

 மெர்சலாக்கும் அஸ்டன் மார்ட்டின் சூப்பர் பைக்... இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

கார்பன் ஃபைபர் சப் ஃப்ரேம், போர்ஜ்டு அலுமினியத்தாலான சக்கரங்கள், பில்லெட் அலுமினியத்தாலான டபுள் விஷ்போன் போன்ற முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

 மெர்சலாக்கும் அஸ்டன் மார்ட்டின் சூப்பர் பைக்... இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

புதிய அஸ்டன் மார்ட்டின் பிரா சுப்பீரியர் ஏஎம்பி 001 பைக்கில் 997 சிசி வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 மெர்சலாக்கும் அஸ்டன் மார்ட்டின் சூப்பர் பைக்... இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

இந்த புதிய சூப்பர் பைக் உருவாக்கம் குறித்து அஸ்டன் மார்ட்டின் நிர்வாக துணைத் தலைவர் மரெக் ரெய்ச்மேன் குறிப்பிடுகையில்,"இந்த சூப்பர் பைக் உருவாக்க திட்டத்தில் உள்ள அனைவருமே பல்வேறு சவால்களை சந்தித்தோம். ஆனால், எங்களது ரோடு கார்கள் போன்றே மிகச் சிறந்ததாக வந்துள்ளது இந்த சூப்பர் பைக். நவீன யுகத்திற்கு தக்க டிசைன் அம்சங்களுடன் இந்த பைக் சேகரிப்பாளர்களின் பெருமை தரும் விஷயமாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

 மெர்சலாக்கும் அஸ்டன் மார்ட்டின் சூப்பர் பைக்... இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

பிராக் சுப்பீரியர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி ஹென்ரிட் கூறுகையில்,"இந்த சூப்பர் பைக்கின் மிகவும் தனித்துவமான விஷயம், இதன் கார்பன் ஃபைபர் பெட்ரோல் டேங்க்கில் கொடுக்கப்பட்டு இருக்கும் துடுப்பு போன்ற அமைப்புதான். இது நிச்சயம் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 மெர்சலாக்கும் அஸ்டன் மார்ட்டின் சூப்பர் பைக்... இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

புதிய ஏஎம்பி 001 சூப்பர் பைக் பந்தய களத்தில் மட்டுமே பயன்படுத்தக்க மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. 1.08 லட்சம் யூரோ விலையில் (இந்திய மதிப்பில் ரூ.92 லட்சம்) விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மொத்தம் 100 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு இறுதியில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.

Most Read Articles
English summary
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலகின் பிரபலமான நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் பந்தய களத்தில் இயக்குவதற்கான புதிய சூப்பர் பைக் மாடலை இங்கிலாந்தை சேர்ந்த பிரா சுப்பீரியர் மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. AMP- 001 என்ற பெயரிடப்பட்டு இருக்கும் இந்த மோடடார்சைக்கிள் கள சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
Story first published: Saturday, June 27, 2020, 18:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X