Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 8 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா?
மிக சமீபத்தில் விற்பனைக்கு வந்த பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று சந்தையைவிட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி. இந்த நிறுவனம், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முதலில் இந்த ஸ்கூட்டரை பெங்களூரு நகரத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.

இம்மாதிரியான சூழ்நிலையில் ஏத்தர் நிறுவனம், 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சென்னை விற்பனையை நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டுமின்றி பெங்களூரு நகரத்திலும் இந்த மின்சார ஸ்கூட்டரின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏத்தர் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு இன்றிலிருந்து (28 நவம்பர்) செயல்பாட்டிற்கு வருவதாக கூறப்படுகின்றது. ஏத்தர் நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை கடந்த 2018ம் ஆண்டே முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருந்தது. விற்பனைக்கு வந்த இரண்டு வருடங்களுக்குள்ளாக இது தற்போது விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் எனெர்ஜியின் இந்த அதிரடி முடிவிற்கு, நிறுவனத்தின் பிற மாடல்களான 450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் ஆகிய மாடல்களுக்கு அமோகமான வரவேற்பு கிடைப்பதே காரணமாக அமைந்துள்ளது. ஆமாங்க, இந்த இரு மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இவற்றில் மட்டுமே கவனம் செலுத்த ஏத்தர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே ஏத்தர் 450 தற்போது விற்பனையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் அறிமுகமானபோது, இதுவே இந்தியாவின் முதல் பிரீமியம் தரத்திலான மின்சார ஸ்கூட்டராக இருந்தது. ஆனால், இதற்கு போட்டியளிக்கின்ற வகையில் சந்தையில் பல்வேறு மின்சார இருசக்கர வாகனங்கள் களமிறங்கியிருக்கின்றன.

450 மற்றும் 450 எக்ஸ் ஆகிய இரு மாடல்களும் ஒரே பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களாகும். ஆகையால் இவையிரண்டிற்கும் இடையே பெரியளவில் வித்தியாசத்தைக் காண முடியாது. இருப்பினும், ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் விஷயத்தில் 450 மாடல், 450 எக்ஸ் மாடலைக் காட்டிலும் பின் தங்கிய வாகனமாக இருக்கின்றது. இதுவும், 450 மாடல் தற்போது வெளியேற்றப்படுவதற்கான காரணமாக இருக்கின்றது.

அதேசமயம், விரைவில் இந்த மின்சார ஸ்கூட்டர் ஓடிஏ அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு வரலாம் என ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் ஆகிய மாடல் மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையைத் துரிதப்படுத்தும் முயற்சியில் ஏத்தர் ஈடுபட இருக்கின்றது. ஏற்கனவே இவ்விரு மாடல்களும் நல்ல விற்பனை விகிதத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன், தன்னுடைய சந்தையை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலும் ஏத்தர் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக, கோழிகோடு, ஹைதராபாத், புனே, மும்பை, டெல்லி, அஹமதாபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் மற்றுமொரு முக்கிய நகரமான கோயம்பத்தூரை ஏத்தர் தேர்வு செய்திருக்கின்றது. இதுதவிர, நாடு முழுவதும் 11 நகரங்களில் 135 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவும் பணியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.

ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டரை நீக்கிய கையோடு, புதிய திட்டத்தை ஏத்தர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ப்ரீ-ஓவ்ன் திட்டத்தை ஏத்தர் 450 வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல்வேறு பலன்களை அவர்களால் அடைய முடியும்.