Just In
- 48 min ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 1 hr ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 1 hr ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
Don't Miss!
- News
வாரணாசி கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்
- Finance
எங்கே? எப்போது? யார்?.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..!
- Sports
பெருமையா இருக்கு.. நட்டுவை கொண்டாடும் மக்கள்.. ஆஸி.யிலிருந்து திரும்பிய சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Movies
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்?
கருப்பு - சிவப்பு வண்ணக் கலவையில் சொக்க வைக்கும் தோற்றத்தில் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிகவும் விசேஷ அம்சங்கள் கொண்ட இந்த ஸ்கூட்டரை புக்கிங் செய்த எல்லோருக்கும் கிடைக்காது. இந்த ஸ்கூட்டரை யார் பெற முடியும் உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அட்டகாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் மூலமாக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. தற்போது அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக 450எக்ஸ் என்ற புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கொரோனாவால் இந்த புதிய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் தள்ளிப்போன நிலையில், விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய ஸ்கூட்டரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ஏத்தர் நிறுவனம்.

அதன்படி, விலை மற்றும் இதன் சிறப்பம்சங்கள் என எதுவுமே தெரியாத நிலையில், ஏத்தர் மீது நம்பிக்கை வைத்து முதலில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. விலை மற்றும் இந்த ஸ்கூட்டர் பற்றி எந்த விபரமும் தெரியாத நிலையில் ஜனவரி 28ந் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த மாடலை தேர்வு செய்து கொள்ள முடியும்.

ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன் சீரிஸ் 1 என்ற பெயரில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏத்தர் 450எக்ஸ் ஸ்டான்டர்டு மாடலைவிட இந்த கலெக்டர்ஸ் எடிசன் சீரிஸ் 1 ஸ்கூட்டரில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன் சீரிஸ் 1 மாடலில் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட பக்கவாட்டு பாடி பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் காஸ்ட் அலுமினியம் சேஸீ மற்றும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அமைப்பை வெளியில் இருந்து பார்க்கும் விதத்தில் இந்த பாடி பேனல்கள் இருப்பது மிகவும் விசேஷமானதாகவும், இந்திய சந்தையில் இதுபோன்ற பாடி பேனல்களுடன் வரும் முதல் ஸ்கூட்டராகவும் கருதப்படுகிறது.

மேலும், கலெக்டர்ஸ் எடிசன் சீரிஸ் 1 மாடல் விசேஷமான மெட்டாலிக் கருப்பு வண்ண பெயிண்ட் பூச்சுடன் வர இருக்கறது. அத்துடன் முன்புற அப்ரான் பேனல் மற்றும் பக்கவாட்டு பாடி பேனல்களில் சிவப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கர்களுடன் தனித்துவமாக இருக்கிறது.

புதிய ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன் சீரிஸ் 1 மாடலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு உள்ளது. இந்த கருப்பு வண்ணத்தில் சிவப்பு அலங்கார ஸ்டிக்கருடன் பார்க்கும்போதே சொக்க வைக்கிறது.

புதிய ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரி பணிகள் வரும் நவம்பரில் துவங்கப்பட உள்ளன. பெங்களூர், சென்னையை தொடர்ந்து ஹைதராபாத், கொச்சி, கோவை, மும்பை, டெல்லி, புனே, ஆமதாபாத், கோழிக்கோடு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 2.9 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த ஸ்கூட்டர் 8 எச்பி பவரையும், 26 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் வார்ப் ஆகிய ரைடிங் மோடுகளை பெற்றிருக்கும். இந்த ஸ்கூட்டர் 0 - 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும்.