ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

டிவிஎஸ் ஐ-க்யூப், பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்களைவிட அதிசெயல்திறன் மிக்க ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியாளர்களைவிட குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட் புதிய மாடல்களின் வரவால் சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது. இதுவரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இந்த சந்தையில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த நிலையில், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த மார்க்கெட்டில் இறங்கி இருப்பதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

இதுவரை வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகப்பிரபலமான மாடலாக இருந்து வந்த ஏத்தர் 450 ஸ்கூட்டர் மாடலுக்கு பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐ-க்யூப் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகையால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

இதனை மனதில் வைத்து பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைவிட அதிக செயல்திறனும், சிறப்பம்சங்களும் கொண்ட புதிய மாடலை ஏத்தர் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய மாடலானது ஏத்தர் 450எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஏத்தர் 450எக்ஸ் மாடலுக்கு ரூ.99,000 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது அடிப்படை விலைதான். மேலும், பிளஸ் மற்றும் புரோ என்ற இரண்டு பெர்ஃபார்மென்ஸ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

இந்த திட்டத்தை மொத்தமாகவும் விலையில் சேர்த்தும், மாதாந்திர முறையிலும் பணம் செலுத்தி பெற முடியும். மாதாந்திர திட்டத்தில் ப்ளஸ் என்ற செயல்திறன் திட்டத்திற்கு ரூ.1,699 கட்டணும், புரோ திட்டத்திற்கு ரூ.1,999 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ப்ளஸ் வேரியண்ட்டிற்கு ரூ.1.49 லட்சமும், புரோ வேரியண்ட்டிர்கு ரூ.1.59 லட்சமும் மொத்த விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் கூடுதலாக ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், 4ஜி இணைய வசதி, புளூடூத் ஆகியவை உள்ளன.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன் மாடலில் விசேஷமான முறையிலான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 2.9kW பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 0 - 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும் என்றும், மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

இந்த ஸ்கூட்டரின் எடை 10 கிலோ குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் பவர் மோடுகள் மட்டுமின்றி புதிதாக வார்ப் என்ற புதிய ரைடிங் மோடு சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதான் ஸ்கூட்டர் மார்கெட்டில் மிக அதிவிரைவான செயல்திறன் கொண்ட மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

இந்த ஸ்கூட்டரின் பேட்டரிக்கு வரம்பில்லாத ஆண்டுகளுக்கான ஆயுட்கால வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பேட்டரியின் செயல்திறன், ரேஞ்ச் ஆகியவை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று ஏத்தர் உத்தரவாதம் அளித்துள்ளது.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைத்து வருகிறது. ஆனால், புதிய 450எக்ஸ் மாடலானது பச்சை - வெள்ளை, பச்சை - ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் - சாம்பல் என மூன்று புதிய வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

ரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

இதுவரை பெங்களூர், சென்னையில் மட்டுமே ஏத்தர் 450 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மேலும் 10 நகரங்களில் விற்பனை செய்வதற்கு ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியம், புனே உள்ளிட்ட நகரங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
Ather Energy has launched the new 450X electric scooter in India with prices starting at ₹ 99,000 (ex-showroom, India).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X