பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

பிரபல மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் பை-பேக் திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் என்ன பலன் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர். இந்நிறுவனம், மின்வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த நிலையில், தனது மின்சார ஸ்கூட்டரின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக அதிரடி சிறப்பு திட்டம் ஒன்றை அது அறிவித்துள்ளது.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

திரும்பி வாங்கிக் கொள்ளுதல் (buyback) எனும் திட்டத்தையே ஏத்தர் அறிவித்துள்ளது. இந்தியாவில் பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ளது. இதை முன்னிட்டு வாகன நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளன.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

பொதுவாக, இந்தியர்களில் பலர் பண்டிகைக் காலத்திலேயே புதிய பொருட்களை வாங்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான் இம்மாதிரியான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வாகன நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்து வருகின்றன.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

அந்தவகையிலேயே பெங்களூருவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம் பைபேக் சிறப்பு திட்டத்தை நேற்று (செவ்வாய்கிழமை) அறிவித்தது. இதன் மூலம் என்ன பயன்?, அப்படிதானே கேட்குறீங்க. ஓர் வாடிக்கையாளர், பைபேக் திட்டத்தின் மூலம் ஏத்தர் மின்சார ஸ்கூட்டரைப் பயன்பாட்டிற்கு வாங்குகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

அவர், சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து அந்த ஸ்கூட்டர் பழையதாகிவிட்டதாக உணர்ந்தாலோ அல்லது ஏத்தர் நிறுவனத்தின் வேறு ஏதேனும் புதிய தயாரிப்பு மீது (அப்போதைய புதிய அறிமுகம்) ஆர்வம் ஏற்பட்டாலோ பைபேக் திட்டத்தின்மூலம் வாங்கிய மின்சார ஸ்கூட்டரை ஒப்படைத்துவிடலாம்.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

அவ்வாறு, ஒப்படைக்கப்படும் ஸ்கூட்டரிற்கு 85 ஆயிரம் ரூபாய் வரை ஏத்தர் திரும்பி வழங்கும். ஆனால், புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்கப்பட்ட முதல் நாளிலிருந்து மூன்றாம் ஆண்டிற்குள் வரை மட்டுமே பொருந்தும். இதற்கு கன்டிஷன்களையும் ஏத்தர் நிர்ணயித்திருக்கின்றது.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

ஏத்தர் 450 மாடலின் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனே 450 எக்ஸ். 2.4 கிலோவாட் லித்தியம்-அயன் பேட்டரி பேக்குடன் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 5.4 கிலோவாட் மற்றும் 20.5 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். ரூ. 1 லட்சம் என்ற விலையில் இது இந்தியாவின் குறிப்பிட்ட நகரத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றது.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே தற்போது இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விரைவில் டெல்லி, மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஏத்தர் களமிறங்கியிருக்கின்றது.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சிறப்பு பைபேக் திட்டத்தை ஏத்தர் அறிவித்துள்ளது. இது ஏத்தர் தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை வைக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகின்றது. இதுதவிர ஏற்கனவே பல்வேறு சிறப்பு சலுகைகளை ஏத்தர் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

பழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...

அந்தவகையில், எரிபொருளால் இயங்கும் ஸ்கூட்டர்களை எக்ஸ்சேஞ்ச் செய்து ஏத்தர் மின்சார ஸ்கூட்டரைப் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன், எளிய தவணை மற்றும் குறைந்த வட்டி உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Ather Announces BuyBack Scheme For Ather 450X. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X