நாடு முழுவதும் 6,500 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் ஏத்தர்... காருக்கும் சார்ஜ் செய்யலாம்!

நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்காக 6,500 விரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் மெகா திட்டத்தை ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்காக இந்தியாவின் மிகப்பெரிய சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 6,500 பாஸ்ட் சார்ஜர் நிலையங்கள்... மெகா திட்டத்தை அறிவித்தது ஏத்தர்!

பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றுவதில் உள்ள நடைமுறை பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், நாடு முழுவதும் 6,500 விரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் 6,500 பாஸ்ட் சார்ஜர் நிலையங்கள்... மெகா திட்டத்தை அறிவித்தது ஏத்தர்!

ஏத்தர் நிறுவனத்தின் ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்கள், 'ஏத்தர் க்ரிட்' என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. சென்னை, பெங்களூர் உள்பட 9 முக்கிய நகரங்களில் 150 விரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் ஏத்தர் நிறுவனம் அமைத்துள்ளது. மேலும், முதல்கட்டமாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் 135 இடங்களில் ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 6,500 பாஸ்ட் சார்ஜர் நிலையங்கள்... மெகா திட்டத்தை அறிவித்தது ஏத்தர்!

தற்போது, சென்னையில் 13 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களும், பெங்களூரில் 37 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்படுத்த உள்ளது ஏத்தர் நிறுவனம்.

நாடு முழுவதும் 6,500 பாஸ்ட் சார்ஜர் நிலையங்கள்... மெகா திட்டத்தை அறிவித்தது ஏத்தர்!

ஏத்தர் சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் சாதகமான விஷயம் என்னவென்றால், ஏத்தர் ஸ்கூட்டர் மட்டுமின்றி, பிற நிறுவனங்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் விரைவான முறையில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

நாடு முழுவதும் 6,500 பாஸ்ட் சார்ஜர் நிலையங்கள்... மெகா திட்டத்தை அறிவித்தது ஏத்தர்!

மேலும், ஏத்தர் நிறுவனத்தின் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 10 நிமிடங்களில் 15 கிமீ தூரம் பயணிக்கும் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

நாடு முழுவதும் 6,500 பாஸ்ட் சார்ஜர் நிலையங்கள்... மெகா திட்டத்தை அறிவித்தது ஏத்தர்!

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ள நகரங்களில் முதலில் 5 முதல் 10 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைத்துவிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி, ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க முடியும் என்று கருதுகிறது.

நாடு முழுவதும் 6,500 பாஸ்ட் சார்ஜர் நிலையங்கள்... மெகா திட்டத்தை அறிவித்தது ஏத்தர்!

மேலும், ஏத்தர் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக, தங்களது நகரங்களில் அருகில் உள்ள ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்கள் பற்றிய தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். மேலும், இலவச பார்க்கிங் பகுதிகள், கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் பகுதிகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களையும் பெறுவதற்கு இந்த செயலி பயன்படும்.

நாடு முழுவதும் 6,500 பாஸ்ட் சார்ஜர் நிலையங்கள்... மெகா திட்டத்தை அறிவித்தது ஏத்தர்!

ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஒட்டுமொத்த மின்சார வாகனத் துறைக்கான மெகா திட்டமாக இந்த ஏத்தர் க்ரிட் நிலையங்களை அமைக்கும் பணியை கையில் எடுத்துள்ளது. இதற்கு பெரிய அளவிலான முதலீடுகளை செய்ய வேண்டி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அதிக அளவு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Energy has announced India’s biggest public charging infrastructure for electric vehicles.
Story first published: Tuesday, October 13, 2020, 16:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X