ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கோவையில் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

கோவையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்க இருப்பதாக ஏத்தர் நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் அண்மையில் அடுத்தடுத்து தங்களது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கின.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

இதனால், ஏத்தர் நிறுவனம் தனது வர்த்தகத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. பெங்களூர், சென்னையில் மட்டுமே தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் தற்போது நாட்டின் பல நகரங்களில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல உள்ளது.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

அதன்படி, கோவை, ஆமதாபாத், கொச்சி மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் தனது 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நகரமாக கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

மேலும், ஏத்தர் நிறுவனம் தனது 450 மற்றும் 450எக்ஸ் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் இந்த நகரங்களில் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்காக, கோவை உள்ளிட்ட நான்கு புதிய நகரங்களிலும் 450 மற்றும் 450 எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

மேலும், கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களிலும் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுப்பதற்கு முன்னதாக விரைவாக சார்ஜ் ஏற்றுவதற்கான ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை திறக்க இருக்கிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் எளிதாக தங்களது ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜ் ஏற்றுவதற்கு இயலும். அவசர சமயத்திலும் இது உகந்ததாக இருக்கும்.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

இதில், 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில், அதன் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக வந்த 450எக்ஸ் மாடலும் வாடிக்கையாளர்களை வசியம் செய்ய காத்திருக்கிறது.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிக டிமான்ட் இருக்கிறதாம். இந்த ஸ்கூட்டரை ரூ.2,500 முன்பணம் செலுத்தி ஏத்தர் இணையதளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரில் 2.9kWh லித்தியம் அயான் பேட்டரி மற்றும் 6kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். 0 - 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் வார்ப் என நான்கு டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

புதிய ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. 4ஜி சிம் கார்டு மூலமாக நேரடி இணைய வசதியையும் பெற முடியும். புளூடூத் இணைப்பு வசதியும் உள்ளது. நேவிகேஷன், ஸ்கூட்டர் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்த தகவல்களை வழங்கும் வசதி, நேரடியாக சாஃப்ட்வேர் அப்டேட் வழங்கும் நவீன அம்சங்கள் உள்ளன.

கோவையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது!

இந்த ஸ்கூட்டரில் இண்டிகேட்டர் தானியங்கி முறையில் அணையும் வசதி, இருள் வேளையில் ஸ்கூட்டரை நிறுத்தினால் சிறிது நேரம் ஒளிரும் விளக்கு வசதி, மொபைல்போன் மூலமாக ஸ்கூட்டரின் பேட்டரியில் சார்ஜ் அளவு, வண்டி இருக்கும் இடம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வசதிகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Bangalore based Ather Energy has officially announced an entry into four new cities in India - Ahmedabad, Coimbatore, Kochi, and Kolkata. The company's entry into the new cities are part of its expansion plans for the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X