குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனக்கின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடத்தில் உள்ளது.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

ஏத்தர் நிறுவனத்தின் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில், அதன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட மாடலாக ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

அதாவது, முதல்கட்ட டெலிவிரிப் பணிகளின்போது, முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகையின்போது ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கைகளுக்கு கிடைத்துவிடும் என்று தெரிகிறது.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

முதல்கட்டமாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் நகரங்களில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி கொடுக்கப்பட உளஅளது. டெல்லி, மும்பை நகரங்களில் வரும் டிசம்பரில் டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும்.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

இதைத்தொடர்ந்து, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் ஸ்நாப்டிராகன் 1.3 GHz பிராசசரில் செயல்படும் 7 அங்குல டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இது 4ஜி இணைய வசதி மற்றும் புளூடூத் 4.2 இணைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. சைடு ஸ்டான்டு சென்சாரும் உள்ளது.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

இந்த ஸ்கூட்டரில் 2.5kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். ஈக்கோ மோடில் வைத்து இயக்கினால், 80 கிமீ தூரம் வரை செல்லலாம். இதன் மின் மோட்டார் 8 பிஎச்பி பவரையும், 26 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டும். மணிக்கு 80 கிமீ வேகம் வரை தொடும் திறன் வாய்ந்தது.

குட்நியூஸ்... ஏத்தர் 450எக்ஸ் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்குகிறது

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி 45 நிமிடங்கள் பிடிக்கும். அதேநேரத்தில், 3 மணி 35 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather has announced that the new 450X electric scooter deliveries will be commenced from November 2020.
Story first published: Monday, September 7, 2020, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X