ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிமுகமாக இருக்கும் 2 புதிய விஷயங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் 2 விஷயங்கள்

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. இளமை துள்ளும் டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக ரேஞ்ச் உள்ளிட்டவற்றுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

 ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் 2 விஷயங்கள்

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல நவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக இரண்டு புதிய விஷயங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் 2 விஷயங்கள்

அதாவது, ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டயர்களில் காற்றழுத்தம் குறைந்தால் எச்சரிக்கும் தொழில்நுட்ப வசதியும், ஸ்மார்ட் ஹெல்மெட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஏத்தர் அதிகாரி ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

 ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் 2 விஷயங்கள்

இதன் மூலமாக இந்திய வாடிக்கையாளர்களின் அனுபவத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஏத்தர் ஈடுபட்டுள்ளது. இது நிச்சயம் பாதுகாப்பை அதிகரிக்கும் விஷயமாக தெரிவிக்கப்படுகிறது. வரும் அக்டோபரில் இந்த 2 புதிய விஷயங்களும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

 ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் 2 விஷயங்கள்

இதனிடையே, சந்தைப் போட்டி அதிகரித்து வருவதையடுத்து, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல புதிய விஷயங்களை கொடுத்து வருகிறது ஏத்தர். மேலும், நேரடி இணைய வசதி கொண்ட இந்த ஸ்கூட்டருக்கு அவ்வப்போது அப்டேட்டுகளையும் நேரடியாக கொடுத்து வருகிறது.

 ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் 2 விஷயங்கள்

அண்மையில் டார்க் மோடு தீம் என்ற அப்டேட்டை அண்மையில் வழங்கியது. இதன்மூலமாக, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையில் உள்ள தகவல்களை தெளிவாக படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுபோன்று, மொத்தம் 7 முறை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் செயல்தளத்தை அட்பேட் செய்துள்ளது ஏத்தர். ஸ்கூட்டரின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் மேம்படுத்தப்படும் வாய்ப்பை இது வழங்கி வருகிறது.

 ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் 2 விஷயங்கள்

இதுதவிர்த்து, எந்த பிராண்டின் இருசக்கர வாகனங்களையும் எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் திட்டத்தையும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. CredR நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை ஏத்தர் சென்னை மற்றும் பெங்களூரில் அறிமுகம செய்துள்ளது ஏத்தர்.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Energy plans to launch two new accessories for the Ather 450X scooter this year. One will be a Tyre Pressure Monitoring System (TPMS) and the second will be a smart helmet. The company plans to launch these accessories by October 2020.
Story first published: Friday, July 3, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X