150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

150 - 200 சிசி செக்மெண்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையில் சிறந்து விளங்கிய டாப்-5 பைக்குகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவிற்கு பின்னர், இந்தியாவில் தற்போது இரு சக்கர வாகனங்களின் விற்பனை மீண்டும் எழுச்சி காண தொடங்கியுள்ளது. குறிப்பாக 150 - 200 சிசி செக்மெண்ட், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 44.83 சதவீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1,58,593 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1,09,502 ஆக மட்டுமே இருந்தது. சாதாரண என்ட்ரி-லெவல் கம்யூட்டர் பைக்குகளை பயன்படுத்தி வந்த பலரும், அதனை மேம்படுத்தும் விதமாக 150-200 சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கு மாறி வருகின்றனர். இதுவே இந்த செக்மெண்ட் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

150-200 சிசி செக்மெண்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பஜாஜ் பல்சர் முதலிடம் பிடித்துள்ளது. பஜாஜ் நிறுவனத்திற்கு அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டிருக்கும் பல்சர் ரேஞ்ச் பைக்குகள் இந்தியா மட்டுமல்லாது, பல சர்வதேச சந்தைகளிலும் மிகவும் பிரபலமாக உள்ளன.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

பல்சர் 150, என்எஸ்160, 180எஃப், என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 உள்ளிட்ட மாடல்களை 150-200 சிசி செக்மெண்ட் உள்ளடக்கியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்கள் 91 ஆயிரம் ரூபாய் முதல் 1.51 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 38,151 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 14.60 சதவீத வீழ்ச்சியாகும்.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 44,672 யூனிட்களாக இருந்தது. 2வது இடத்தை டிவிஎஸ் அப்பாச்சி ரேஞ்ச் பிடித்துள்ளது. பெர்ஃபார்மென்ஸ் செக்மெண்ட்டில் இதுவும் மிகவும் புகழ் வாய்ந்த மாடலாக உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்த செக்மெண்ட்டில் ஐந்து பைக்குகளை வழங்கி வருகிறது.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 160 4வி, ஆர்டிஆர் 180, ஆர்டிஆர் 200 4வி, ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ100 என மொத்தம் 5 பைக்குகள் வழங்கப்படுகின்றன. 87 ஆயிரம் ரூபாய் முதல் 1.34 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் இந்த பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 33,540 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 27.04 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 26,402 ஆக மட்டுமே இருந்தது. மூன்றாவது இடத்தை ஹோண்டா யூனிகார்ன் 160 பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 29,441 யூனிகார்ன் 160 பைக்குகளை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

ஹோண்டா யூனிகார்ன் பைக்கின் பிஎஸ்-6 மாடல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம், 93,593 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 17,868 யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையுடன் யமஹா எஃப்இஸட்-எஃப்ஐ மற்றும் எஃப்இஸட்எஸ்-எஃப்ஐ பைக்குகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15,368 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இது 16.27 சதவீத வளர்ச்சியாகும். 5வது இடத்தை ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 12,037 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகளை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 476.76 சதவீதம் என்ற பிரம்மாண்டமான வளர்ச்சியாகும்.

150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா? அப்பாச்சியா? யூனிகார்னா?

ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 2,087 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. வரும் மாதங்களில் பைக்குகளின் விற்பனை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கொரோனா அச்சத்தால் மக்கள் பொது போக்குவரத்தை தவிர்ப்பது மற்றும் தீபாவளி பண்டிகை காலம் ஆகியவை இதற்கு முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.

Most Read Articles

English summary
August 2020 Bike Sales Report: 150cc - 200cc Segment. Read in Tamil
Story first published: Saturday, September 26, 2020, 21:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X