எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...

மும்பையை சேர்ந்த ஆர்ஆர் கபேல் என்ற நிறுவனம் பி.காஸ் ப்ராண்ட்டின் மூலமாக இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் நுழைந்துள்ளது. மேலும் இந்த ப்ராண்ட்டில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

ஏ2 மற்றும் பி8 என பெயரிப்படப்பட்டுள்ள இந்த இரு பி.காஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் புனேவில் உள்ள இந்நிறுவனத்தின் சாகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு வழங்கப்படவுள்ள ஐந்து வேரியண்ட்களிலும் வேரியண்ட்டை பொறுத்து பேட்டரிகள் பொருத்தப்படவுள்ளன.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

இதற்கிடையில் இதில் விலை குறைவான வேரியண்ட்டின் அதிகப்பட்ச வேகம் 40லிருந்து 50kmph வரையில் இருக்கும் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதேபோல் இந்த வேரியண்டகள் ரூ.50,000-ல் இருந்து ரூ.90,000 விலையில் விற்பனை செய்யப்படலாம். ஹையர் வேரியண்ட்கள் அதிகப்பட்சமாக 85-ல் இருந்து 90 kmph வரையிலான வேகத்தில் இயங்கும் என தெரிகிறது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

இவற்றின் விலை ரூ.1.25- 1.40 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படவுள்ளது. பி.காஸ் ப்ராண்ட்டின் இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரி பணிகள் வருகிற ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இருந்து துவங்கப்படவுள்ளன. இதற்காக தயாரிப்பு நிறுவனம் மொத்தம் ரூ.125 கோடியை அடுத்த மூன்று வருடங்களில் முதலீடு செய்யவுள்ளது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

அட்டகாசமான டிசைன், குறைவான பராமரிப்பு, சிறப்பான ஆற்றல், விரைவான சார்ஜிங், ஐஒடி உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறப்பம்சங்களாக இருக்கும். இந்த வகையில் பி8 ஸ்கூட்டரில் 1,900 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படவுள்ளது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

இதற்கு நிலையாக பொருத்தப்பட்ட ஆசிட் பேட்டரி, நகர்த்தக்கூடிய தேர்வுடன் லித்தியம்-இரும்பு, லித்தியம்-டெக் உள்ளிட்ட பேட்டரி தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. குறைந்தது மூன்று மணிநேரங்களும் அதிகப்பட்சமாக 7-8 மணிநேரங்கள் வரையில் சார்ஜிங் நேரத்தை கொண்டிருக்கும் இந்த பேட்டரிகள் சிங்கிள் சார்ஜில் 70-78கிமீ வரையில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

மற்ற அம்சங்களாக ரைட் மெட்ரிக்ஸ், ரிமோட் டைக்னாஜிஸ்டிக்ஸ், நேரலை ட்ராக்கிங், ஜியோஃபென்சிங் மற்றும் முழு சார்ஜ் அலார்ட்கள் உள்ளிட்டவை இருக்கும். பி.காஸ் ப்ராண்ட் பி8 ஸ்கூட்டரின் மோட்டாருக்கு மூன்று வருட உத்தரவாதத்தை வழங்கவுள்ளது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஏ2-வில் 250 வாட்ஸ் மோட்டார் ஆனது நிலையான லீட் ஆசிட் மற்றும் நகர்த்தக்கூடியதான லித்தியம்-இரும்பு என்ற இரு பேட்டரி தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளது. இந்த பேட்டரிகள் மூலமாக கிட்டத்தட்ட 110கிமீ வரையிலான ரேஞ்சை பெற முடியும்.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

இந்த இரு பேட்டரிகளை சார்ஜ் செய்ய குறைந்தது 2.15 மணிநேரங்களும், அதிகப்பட்சமாக 7-8 மணிநேரம் வரையிலும் தேவைப்படும். இதில் லித்தியம்-இரும்பு பேட்டரிக்கு மூன்று வருட உத்தரவாதத்தையும். ஆசிட் மாடலிற்கு ஒரு வருட உத்தரவாதத்தையும் வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த புதிய நிறுவனம்...

லித்தியம் பேட்டரிகள் இந்தியாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தும், லீட் ஆசிட் பேட்டரிகள் இவற்றை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் லோக்கல் ட்ரேடர்களாலும் பெறப்படவுள்ளதாக பி.காஸ் ப்ராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இரு ஸ்கூட்டர்களிலும் சிபிஎஸ், ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் மற்றும் முன்புற டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படவுள்ளன.

Most Read Articles

English summary
BGAUSS unveils its first two models for India with five variants
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more