வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

யுலு என்ற மொபைலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்காக மிக குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீன இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக வெளிவரவுள்ள இந்த இ-ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

பெங்களூருவை சேர்ந்த யுலு மொபைலிட்டி நிறுவனம் தற்சமயம் சீன மோட்டார்சைக்கிள்களை தான் பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகிறது. இதன் பயன்பாட்டை குறைக்கும் விதமாக யுலு நிறுவனத்தில் பஜாஜ் நிறுவனம் ரூ.8 மில்லியனை முதலீடு செய்துள்ளது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

சீனாவில் இருந்து யுலு நிறுவனம் சிங்கிள்-சீட், லோ-பவர் இவி வாகனங்களை பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்து பயன்படுத்தி வருகிறது. இதனால் தான் பஜாஜ் நிறுவனம் இடையில் நுழைந்து சிறந்த தரத்திலான இ-ஸ்கூட்டர்களை ரூ.30,000- ரூ.35,000 விலையில் வழங்க முடிவு செய்துள்ளது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

இவ்வாறான ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதலீடு செய்வது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து யுலு நிறுவனத்தின் சிஇஒ அமித் குப்தா கூறுகையில், யுலு நிறுவனம் தற்சமயம் ஒரு மோட்டார்சைக்கிளுக்கு கிட்டத்தட்ட $ 600-ஐ (இந்திய மதிப்பில் ரூ.43,000) செலவிடுகிறது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

இதுவே பஜாஜ் ஆட்டோ எங்களுடன் இணைந்தால் இந்த விலை மதிப்பு $500 (ரூ.36,000) வரையில் குறைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் எங்களது நிறுவனத்தின் இலாபமும் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரிக்கும் என கூறினார்.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

மேலும், யுலு நிறுவனத்தில் தற்சமயம் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தீம் அமைப்பை தான் பஜாஜ் இவி ஸ்கூட்டர்களும் பெறவுள்ளதாகவும் குப்தா கூறியுள்ளார். இதனால் இந்த ஸ்கூட்டர்கள் எளிமையாகவும் பராமரிப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

ஆனால் இன்னும் ஆரம்ப கட்ட தயாரிப்பில் இருக்கும் பஜாஜின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மூலம் தற்போதைய சீன மாடல்களை விட சீரான இயக்கத்தை பெற முடியும் என யுலு நிறுவனம் நம்பி கொண்டுள்ளது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

இந்த 2020ஆம் வருடம் முடிவதற்குள் ஒரு லட்ச எலக்ட்ரிக் மற்றும் குறைவான எடை கொண்ட மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்சமயம் 4000 என்ற அளவில் தான் யுலு ஸ்டார்ட்-அப் நிறுவனத்திடம் உள்ளது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

இந்த வருடத்திற்குள்ளாக லட்ச இரு சக்கர வாகனங்களை பயன்பாட்டு கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தாலும், பஜாஜின் யுலு ப்ராண்ட் இ-பைக்குகள் அடுத்த ஆண்டில் தான் மார்க்கெட்டிற்கு வரவுள்ளன. இந்த இ-பைக்குகளுக்காக யுலு நிறுவனம் சுமார் ரூ.400 கோடியை முதலீடு செய்துள்ளது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

யுலுவின் தற்போதைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 25 கிமீ/நேரம் வேகத்தில் இயங்கக்கூடியது. இதன் வேகம் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்றாலும், நகர்புறங்களில் கடுமையான போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இயக்குவதற்கு யுலு பைக்குகள் மிகவும் ஏற்ற வாகனமாக உள்ளது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

பெங்களூருவில் பெரும்பான்மையான அனைத்து நகர்களிலும் கிடைக்கும் யுலு இ-ஸ்கூட்டர்கள் மும்பை, டெல்லி, புனே மற்றும் புவனேஷ்வரிலும் மிக வேகமாக பிரபலமாகி வருகின்றன. இதனால் இந்த மொபைலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தங்களது வணிகத்தை மற்ற அனைத்து இந்திய நகரங்களுக்கும் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

யுலுவின் இந்த குறைவான வேக ஸ்கூட்டர்களை இயக்குவதற்கு ஓட்டுனர் உரிமம் அவசியமானது இல்லை. இதன் எலக்ட்ரிக் மோட்டாரில் உள்ள பேட்டரி சிங்கிள் சார்ஜில் 60கிமீ வரை இயங்கக்கூடியது. ஆனால் பேட்டரியின் சார்ஜ் சதவீதத்தை பற்றி எல்லாம் வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

இத்தகைய யுலு இ-ஸ்கூட்டர்களை ஒரு மணிநேரத்திற்கு இயக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இ-பைக்குகள் மட்டுமில்லாமல் பை-சைக்கிள்களையும் இந்நிறுவனம் பயன்படுத்துவதற்கு வழங்கி வருகிறது.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

யுலு இ-ஸ்கூட்டர்களை பயன்படுத்துவது மிக எளிது. முதலில் யுலு ஆப்-ஐ play store-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் நீங்கள் இருக்கும் இடத்தின் லொக்கேஷனை தன்னிச்சையாகவோ அல்லது வரைப்படம் மூலமாகவோ கொடுத்த பின்னர், மொபைலின் ப்ளூடூத் உதவியின் மூலமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் யுலு இ-பைக்குகளை அன்லாக் செய்து இயக்கி செல்லுங்கள்.

வெறும் 35 ஆயிரம் ரூபாயில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பஜாஜ்...

யுலு நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதால் சென்னையில் இதன் பயன்பாடு தற்போது ஆரம்ப நிலையில் தான் உள்ளது. ஆனால் சென்னை இளைஞர்களும் மாணவர்களும் இத்தகைய இ-பைக்குகளை மிகவும் விரும்புவார்கள் என்பதால் யுலு மோட்டார்சைக்கிள்களை மிக விரைவில் சென்னை சாலைகளில் பார்க்கலாம்.

Source: Rushlane

Most Read Articles
English summary
Bajaj Auto invested Rs.8 million in Bangalore based Yulu mobility start-up
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X