பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டரான சேத்தக்கின் டெலிவரி பெங்களூருவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பிறகு சேத்தக் ஸ்கூட்டருக்கு மீண்டும் மறு பிறவி வழங்கியிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மாடலாக அல்லாமல் தற்போது மின்சார ரகத்தில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

அதிலும், முதல்கட்டமாக புனே மற்றும் பெங்களூருவில் மட்டுமே இந்த மின்சார ஸ்கூட்டர் இப்போது விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

இதைத்தொடர்ந்து, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணியில் பஜாஜ் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, முந்தைய மடால் சேத்தக்கிற்கு இந்தியாவில் நிலவிய வரவேற்பைப் போலவே தற்கால மாடலுக்கும் வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல கட்ட நடவடிக்கைகளை பஜாஜ் செய்திருக்கின்றது.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

குறிப்பாக, இந்தியர்களைக் கவர வேண்டும் என்பதற்காக தற்கால தோற்றம் மட்டுமின்றி அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஏராளமானவற்றை இந்த புதிய மின்சார சேத்தக் ஸ்கூட்டரில் பஜாஜ் சேர்த்திருக்கின்றது.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

அதாவது ஜிபிஎஸ் அடங்கிய லைவ் டிராக்கிங், ப்ளூடூத் கனெக்ட்விட்டி, மொபைல் போன் சார்ஜிங் பாயிண்ட் என் எக்கச்சக்கமான தொழில்நுட்ப அம்சங்களும், வசதிகளும் சேத்தக்கில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

பஜாஜின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக, நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே சேத்தக்கிற்கு நல்ல எதிர்பார்பு நிலவி வருகின்றது. இரு நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வேலையில் புனேவில் மட்டுமே 21 யூனிட்டுகள் கடந்த மாதம் டெலிவரி செய்யப்பட்டன.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

இது, முதல் மாத டெலிவரி ரிப்போர்ட் ஆகும். இதுதவிர ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கான விருப்பத்தை புக்கிங்குகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

இந்நிலையில், புனேவை அடுத்து தற்போது பெங்களூருவிலும் இரண்டாம் கட்டமாக புக்கிங் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெங்களூருவில் வசித்து வரும் இளைஞர் முதல் சேத்தக் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. இது சேத்தக்கின் உயர்நிலை வேரியண்ட் ஆகும்.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் அர்பன் மற்றும் பிரிமியம் ஆகிய இரு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், ஆரம்பநிலை வேரியண்டான அர்பனிற்கு ரூ. 1 லட்சம் என்ற விலையும், உயர்நிலை வேரியண்டான பிரிமியமிற்கு ரூ. 1.15 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

இந்த மின்சார ஸ்கூட்டர்கள் பிரத்யேகமாக கேடிஎம் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், இதற்கான புக்கிங் கேடிஎம் ஷோரூம் மற்றும் ஆன்லைனில் செய்யப்பட்டு வருகின்றது.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

பஜாஜ் நிறுவனம் சேத்தக்கிற்கு பிரபல வெஸ்பா ஸ்கூட்டர்களைப் போன்று கிளாசியான தோற்றத்தை வழங்கியிருக்கின்றது. வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், முகப்பு பகுதி, சைட் வியூ மிர்ரர் உள்ளிட்ட அனைத்தும் சேத்திற்கு வெற லெவல் ஸ்டைலான லுக்கை வழங்குகின்றது. இந்த தோற்றத்திற்காகவே தற்போது புக்கிங்குகள் ஏராளமாக குவிந்து வருகின்றது.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தொடுதிறனுடைய ஸ்விட்ச் கியர், பேட்டரி மேலாண்மை அமைப்பு, மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் இரு சவாரி மோட்கள் பிரிமியம் வசதிகளும் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

இதேபோன்று, அதீத பேட்டரி பேக்-அப்பிற்காக பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்களில் ஐபி67 தரம் வாய்ந்த லித்தியம் அயன்-பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 4kW திறன் கொண்ட மின் மோட்டாருக்கு தேவையான திறனை வழங்கும். இந்த மின்சார எஞ்ஜின் அதிகபட்சமாக 16 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

பெங்களூருவில் தொடங்கிய பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி... பதறும் ஏத்தர்..

மேலும், இந்த ஸ்கூட்டர் ஈகோ மோடில் 95 கிமீ ரேஞ்சையும், ஸ்போர்ட் மோடில் 85 கிமீ ரேஞ்சையும் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தது 5 மணி நேரங்கள் தேவைப்படுகின்றது. அதுவே, 25 சதவீதம் சார்ஜேற்ற வெறும் 60 நிமிடங்கள் போதுமானதாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Chetak Electric Scooter Delivered To Bangalore’s First Customer: Arrives In Top-Spec Variant. Read In Tamil.
Story first published: Saturday, March 7, 2020, 15:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X