முதல் மாதத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக்... ஆரம்பத்திலேயே 21 யூனிட்டுகளா..?

பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டரான சேத்தக்கின் முதல் மாத விற்பனைப் பற்றிய தகவல் வெளயாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

பஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின் சேத்தக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால், இம்முறை பெட்ரோல் ஸ்கூட்டராக அல்லாமல் மின்சார ரகத்தில் அது அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திற்கு அந்த மின்சார ஸ்கூட்டர் அப்கிரேட் செய்யப்பட்டிருந்தது. இதனால், இந்தியர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை அது பெறத் தொடங்கியுள்ளது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

குறிப்பாக கிளாசியான தோற்றம் இளசுகளை தன் வசம் கவர தவறவில்லை. இதனால், இந்த ஸ்கூட்டருக்கு புக்கிங் குறைகூட முடியாத அளவிற்கு வெற்றிகரமாக செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த மின்சார ஸ்கூட்டரின் முதல் மாத விற்பனைப் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

சேத்தக் மின்சார ஸ்கூட்டர் மட்டுமின்றி பஜாஜ் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளின் விற்பனைப் பற்றிய தகவலும் வெளியாகியிருக்கின்றது.

இந்த தகவலின்படி, பஜாஜ் நிறுவனம் கடந்த ஜனவரி மாத விற்பனையைக் காட்டிலும் நடப்பாண்டு ஜனவரி மாத விற்பனையில் கடும் சரிவைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

குறிப்பாக, பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையாக 1,57,796 யூனிட்டுகள் உள்ளன. இது, கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாத சேலைக் காட்டிலும் 22.4 சதவீத குறைந்த விற்பனையாகும்.

இந்த விற்பனை வீழ்ச்சியால் ஹீரோ, ஹோண்டா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பின்னால் நான்காவது இடத்தைப் பஜாஜ் பெற்றிருக்கின்றது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

பஜாஜ் பல்சர் 150 மற்றும் பிளாட்டினா ஆகிய இரு பிரபலமான பைக்குகளின் விற்பனை 35 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்ததே பஜாஜ் நிறுவனத்தின் இத்தகைய அவலநிலைக்குக் காரணம் ஆகும்.

இதைத்தொடர்ந்து, புது முக மாடலாக இருக்கும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரின் விற்பனைப் பற்றிய தகவலும் வெளியாகியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

அதன்படி, சேத்தக் மின்சார ஸ்கூட்டரின் 21 யூனிட்டுகள் இதுவரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, புது முக மாடலுக்கு நல்ல வரவேற்பாக பார்க்கப்படுகின்றது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

பஜாஜ் நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை அர்பன் மற்றும் பிரிமியம் ஆகிய இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தொடர்ந்து, புனே மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் மட்டுமே இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

இதனாலயே 21 யூனிட்டுகள் மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகின்றது. இதில், அர்பன் ஸ்கூட்டருக்கு ரூ. 1 லட்சம் என்ற விலையும், பிரிமியம் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் என்ற தொகையும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

இவ்விரு வேரிண்யண்ட் மின்சார ஸ்கூட்டர்களும் தற்போது கேடிஎம் டீலர்ஷிப்கள் வாயிலாக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், இதனை பஜாஜ் ஷோரூம்களில் அல்லாமல் கேடிஎம் ஷோரூம்களில் மட்டுமே காண முடியும்.

இந்த மின்சார ஸ்கூட்டரின் தோற்றம் வெஸ்பாவைப் போல் கிளாசியானதாக உள்ளது. தொடர்ந்து, நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றையும்கூட அது உள்ளடக்கியிருக்கின்றது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

அந்தவகையில், கிளவுட்டைச் சார்ந்த அம்சங்கள், ஆன்போர்டு டயக்னாஸ்டிக், ஸ்மார்ட்போன் இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், குதிரை லாடம் வடிவிலான ஹெட்லேம்ப் எல்இடி வளவைு, தொடுதிறன் கொண்ட ஸ்விட்ச் கியர் மற்றும் பல ஏராளமான சிறப்பம்சங்கள் இந்த மின்சார ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றது.

இதுதவிர, பேட்டரி மேலாண்மை அமைப்பு, மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் இரு சவாரி மோட்கள் போன்ற வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

இந்த ஸ்கூட்டர்களில் ஐபி67 தரம் வாய்ந்த லித்தியம் அயன்பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது, 4kW திறன் கொண்ட மின் மோட்டாருக்கு தேவையான திறனை வழங்கும். இந்த மின்சார எஞ்ஜின் அதிகபட்சமாக 16 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

இது, ஈகோ மோடில் 95 கிமீ ரேஞ்சையும், ஸ்போர்ட் மோடில் 85 கிமீ ரேஞ்சையும் வழங்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தது 5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

ஆரம்பத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்.. 2 நகரங்கள் - ஒரே மாதம்: 21 யூனிட்டுகள் டெலிவரி..!

அதுவே, 25 சதவீதத்தை மட்டும் பெற 60 நிமிடங்கள் போதுமாம். இந்த சிறப்பு வாய்ந்த மின்சார ஸ்கூட்டரின் வருகையை இந்தியாவின் அனைத்து மாநில வாசிகளும் எதிர்கொண்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சென்னைப் போன்ற முக்கியமான பெரு நகர வாசிகள் மத்தியில் இந்த ஸ்கூட்டர் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு, இந்த ஸ்கூட்டரின் பாரம்பரிய தோற்றம் மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Chetak Electric Scooter First Month Sales Report. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X