Just In
- 46 min ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 3 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- News
முதல் டோஸ் போட்டதும் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்துவிடாதீர்- பிரதமர் மோடி எச்சரிக்கை
- Movies
சுச்சி தெரிஞ்சுதான் பண்றாங்களா? அதை எதுக்கு சொல்லணும்.. சுச்சி பேச்சால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
- Sports
ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
14 ஆண்டுகளுக்கு பின் புது அவதாரத்தில் திரும்ப வந்தது பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்! விலை எவ்வளவு தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பின் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் புதிய அவதாரத்தில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் மனங்களை வென்ற பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மிக மிக நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மார்க்கெட்டிற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளது. ஆனால் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் அவதாரத்தில் பஜாஜ் சேத்தக் தற்போது வந்துள்ளது. ஆம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று (ஜனவரி 14) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பஜாஜ் தயாரித்து வந்த பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று சேத்தக். ஒரு காலத்தில் பட்டி தொட்டியெங்கும் சேத்தக் ஸ்கூட்டர் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் உற்பத்தி கடந்த 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2006ம் ஆண்டுதான் சேத்தக் ஸ்கூட்டரின் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் நிறுத்தியது.

சுமார் 14 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் தற்போது எலெக்ட்ரிக் அவதாரத்தில் இந்திய மார்க்கெட்டிற்கு மீண்டும் வந்துள்ளது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனில் பழைய வெர்ஷனின் சில அம்சங்கள் தென்படுகின்றன. அதே சமயம் மாடர்ன் டிசைன் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் பழமை, புதுமை என இரண்டையும் கலந்து கட்டி கவர்ச்சிகரமான வகையில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்திய மார்க்கெட்டில் பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சேத்தக்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மார்க்கெட்டில் ஏத்தர் 450 (Ather 450) மற்றும் ஒகினவா பிரைஸ் (Okinawa Praise) உள்ளிட்ட மாடல்களுடன் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடவுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சகான் பகுதியில் செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. சேத்தக் மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளில் பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள் என பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 95 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணம் செய்ய முடியும். ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது, உங்களால் இந்த ரேஞ்ச்சை பெற முடியும். அதே நேரத்தில் ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது, பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 85 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான ரேஞ்ச்சை வழங்கும்.

சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி 70 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் மேலாக நீடித்து உழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3kWh லித்தியம்-அயான் பேட்டரி உள்ளது. அத்துடன் 4kW மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 16 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய திறன் வாய்ந்தது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் வரை ஆகும். அதே சமயம் 25 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கு 1 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி, பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்து கொள்ளலாம்.

பெங்களூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள குறிப்பிட்ட கேடிஎம் டீலர்ஷிப்களில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர www.chetak.com வாயிலாக ஆன்லைனிலும் புக்கிங் செய்ய முடியும். குறிப்பிட்ட கேடிஎம் டீலர்ஷிப்களில் நடப்பு மாத இறுதியில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் டிரைவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கத்தில் பெங்களூர் நகரில் உள்ள 14 கேடிஎம் டீலர்ஷிப்களிலும், புனே நகரில் இயங்கி வரும் 4 கேடிஎம் டீலர்ஷிப்களிலும் மட்டுமே பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கவுள்ளது. அடுத்த மாத (பிப்ரவரி) இறுதியில் இருந்து, பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்பேன் மற்றும் பிரீமியம் என மொத்தம் இரண்டு வேரியண்ட்களில், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய். இது அர்பேன் வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் பிரீமியம் வேரியண்ட்டின் விலை 1.15 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.