பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான பட்ஜெட் பைக் மாடல்களாக சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகள் விற்பனையில் உள்ளன. இந்த பைக்குகளுக்கு ஊரகப் பகுதிகளில் மிக அதிக வரவேற்பு இருக்கின்றன. மேலும், எளிமையான பராமரிப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் போன்றவை இந்த பைக்குகளை முன்னிலைப்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

இந்த நிலையில், பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளின் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்-6 பஜாஜ் சிடி100 பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள், எஞ்சின் பாதுகாப்புக்கான புதிய பேஷ் பிளேட்ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 102 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் தற்போது எலெக்ட்ரானிக் இன்ஜெக்ஷன் என்ற புதிய அமைப்புடன் பிஎஸ்-6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

இந்த எஞ்சின் 7.7 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய சிடி100 பிஎஸ்-6 பைக்கிற்கு ரூ.40,794 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

இதேபோன்று, பிளாட்டினா பிஎஸ்-6 மாடல் 100 சிசி மற்றும் 110 சிசி எச்-கியர் என்ற இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதில், பிளாட்டினா பிஎஸ்-6 பைக் மாடல்கள் ரூ.47,624 முதல் ரூ.54,797 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். பழைய பிஎஸ்-4 மாடலைவிட ரூ.6,300 கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

பிற நிறுவனங்களை போல இல்லாமல் பஜாஜ் புதிய எரிபொருள் செலுத்து அமைப்பை இந்த பைக்குகளில் பயன்படுத்தி உள்ளது. அதாவது, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இல்லாமல், எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலமாக கட்டுப்படுத்தப்படும் இ-கார்புரேட்டர் அமைப்புடன் இந்த பைக்குகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

பிற பைக் நிறுவனங்கள் கார்புரேட்டருக்கு பதிலாக, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பயன்படுத்துவதால், விலையை கணிசமாக உயர்த்துகின்றன.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

ஆனால், பஜாஜ் நிறுவனத்தின் இந்த புதிய பைக்குகளில் இ-கார்புரேட்டர் பயன்படுத்தப்படுவதால், பிஎஸ்-4 மாடலைவிட பிஎஸ்-6 மாடலின் விலை சற்றே அதிகரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

இ-கார்புரேட்டர் மூலமாக விலையை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமின்றி, எளிதாக பராமரிப்பு செலவு மற்றும் பழைய அளவிலேயே சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தக்க வைக்கவும் பயன்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ பெருமிதம் தெரிவித்துள்ளது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பிஎஸ்-6 மாடல்கள் தொடர்ந்து சிறந்த மதிப்பை வழங்கும் மாடல்களாக தக்க வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. விலை, பிஎஸ்-6 தரம் ஆகியவை இந்த பைக்குகளுக்கான வரவேற்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Bajaj Auto has launched BS6 versions of CT100 and Platina bike models in India.
Story first published: Tuesday, January 28, 2020, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X