Just In
- 1 hr ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 2 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 2 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- News உலகை ஆட்டிப்படைக்கும் மஞ்சள் பிசாசு! தங்க விலை ஏறுவது ஏன்?
- Finance PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பஜாஜ் டோமினார் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
பிஎஸ்6 எஞ்சின் மற்றும் கூடுதல் மாற்றங்களுடன் பஜாஜ் டோமினார் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், எஞ்சின் மற்றும் விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
க்ரூஸர் பைக் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாடலாக பஜாஜ் டோமினார் 400 பைக் இருந்து வருகிறது. நீண்ட தூரம் பயணம் மற்றும் தினசரி நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களை இந்த பைக் பெற்றிருப்பதால், நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
வசீகரமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை போன்றவை இந்த பைக்கிற்கு க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் தனி மதிப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டுள்ள பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. எஞ்சின் மட்டுமின்றி, மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கில் 373.3 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 39 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிஎஸ்4 மாடலைவிட தற்போது இந்த எஞ்சின் 4 பிஎச்பி பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் திறனுடன் வந்துள்ளது.
இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் இந்த பைக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், க்ரூஸர் பைக்குகளுக்கே உரித்தான இரண்டு திரைகளுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட்டுகள், டபுள் பேரல் சைலென்சர், ஃபோர்ஜ்டு ஸ்டீல் சைடு ஸ்டான்டு, அலுமினியத்தாலான சைடு மிரர் தாங்கிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இந்த பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.
புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 மாடலில் முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பஜாஜ் டோமினார் 400 பிஎஸ்6 மாடலானது அரோரா க்ரீன் மற்றும் வைன் பிளாக் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டோமினார் 250 பைக்கில் சிவப்பு வண்ணத் தேர்வும் உள்ள நிலையில், இந்த மாடலில் இடம்பெறவில்லை.
புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் ரூ.1.91 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கை முன்பதிவு செய்பவர்களுக்கு ஊரடங்கு முடிந்தவுடன் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் உடனடியாக துவங்கப்படுவதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!