அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

டோமினார் எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில் பஜாஜ் டோமினார் 400 பைக் மாடலை அட்வென்ஜெர் வகை பைக்காக ஆட்டோலாக் டிசைன் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று மறு உருவாக்கம் செய்துள்ளது. இதனால் அசத்தலான தோற்றத்திற்கு மாறியுள்ள இந்த டோமினார் அட்வென்ஜெர் பைக்கை பற்றி இந்த செய்தியில் காண்போம்.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

பஜாஜ் டோமினார் 400, இந்தியாவில் பிரபலமான சிங்கிள்-சிலிண்டர் மோட்டார்சைக்கிள்களில் ஒன்று. கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்குடன் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்துள்ள இந்த டோமினார் 400 மாடலின் சமீபத்திய தலைமுறை பைக் ரூ. 1.90 லட்சத்தில் எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் வகை பைக்குகளின் தோற்றங்களை கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும் டோமினார் 400 பைக் தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

கேடிஎம் நிறுவனத்தின் 390 வரிசை மாடல்களை பொறுத்தவரை, ட்யூக், ஆர்சி மற்றும் அட்வென்ஜெர் என்ற மூன்று தோற்றங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பஜாஜ் வாடிக்கையாளர்களும் டோமினார் 400 மாடலின் புதிய அவதாரத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

புனேவை மையமாக கொண்டு செயல்படும் ஆட்டோலாக் டிசைன் நிறுவனத்தின் இவ்வாறான அட்வென்ஜெர் பைக் தயாரிப்பால், மற்ற கஸ்டமைஸ்ட் நிறுவனங்களும் மறு உருவாக்கம் செய்வதற்கு டோமினார் 400 பைக் உகந்ததாக உள்ளதாக கருதக்கூடும்.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

இந்த கஸ்டமைஸ்ட் டோமினார் எக்ஸ்ப்ளோரர் பைக்கை பற்றி கூற வேண்டுமென்றால், மறு உருவாக்கத்தால் இந்த பைக் முழுவதும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த கஸ்டமைஸ்ட் மாற்றங்களில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது எதுவென்றால், கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள பேனல்கள் எதுவும் பைக்கின் இயந்திர பாகங்களின் செயல்படுதிறனை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு பொருத்தப்பட்டுள்ளன.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

அளவுக்கு அதிகமான டிசைன் பேனல்கள் எதையும் கொண்டில்லாமல் பார்ப்பதற்கு சந்தையில் அறிமுகமான புதிய அட்வென்ஜெர் மோட்டார்சைக்கிளை போன்று காட்சியளிக்கும் இந்த டோமினார் எக்ஸ்ப்ளோரர் பைக்கின் முன்புறத்தில் உயரமான விண்ட்ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

இதற்கு எதிர்புறமான டிசைனில் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக ஃபெண்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் பொருட்களை வைப்பதற்கான உலோக சட்டம் சிறப்பான மார்ஜின் உடன் உள்ளது. இதனால் இந்த கஸ்டமைஸ்ட் பைக்கின் பின்புறத்தை பார்க்கும்போது என்எஸ்200 மற்றும் ஏஎஸ்200 பைக் மாடல்களை ஒத்து காணப்படுகிறது.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

மேலும் இந்த டோமினார் எக்ஸ்ப்ளோரர் பைக் பளபளப்பான சிவப்பு மற்றும் வெள்ளை என்ற ட்யூல்-டோனில் காட்சியளிக்கிறது. அதிலும் வெள்ளை நிறம் என்ஜினிற்கு மேற்புறத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நின்று கொண்டு ரைடிங் செய்யும்போது சிறப்பான கண்ட்ரோலிற்காக ஹேண்டில்பார் சற்று உயரமாக பொருத்தப்பட்டுள்ளது.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

இதனால் இந்த கஸ்டமைஸ்ட் பைக் நிச்சயம் பைக் ரேஸர்களுக்கு பார்த்தவுடன் பிடித்துவிடும். ஆட்டோலாக் டிசைன் கஸ்டமைஸ்ட் நிறுவனம் இந்திய மோட்டார்சைக்கிள்களுக்கென அதிகளவில் சிறப்பான கஸ்டமைஸ்ட் பாகங்களை புதியதாக உருவாக்கி வைத்துள்ளது.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

டோமினார் எக்ஸ்ப்ளோரர் பைக்கில் வழங்கப்பட்டுள்ள பாகங்களில் சிலவற்றை இந்த நிறுவனமே சொந்தமாக தயாரித்துள்ளது. டிசைன் மாற்றம் தவிர்த்து பைக்கின் என்ஜினின் திறனில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

இதனால் தற்போதைய பஜாஜ் டோமினார் 400 மாடலின் 373சிசி லிக்யூடு-கூல்டு DOHC சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதே 40 பிஎச்பி பவரையும் 35 என்எம் டார்க் திறனையும் தான் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தவுள்ளது. இதனுடன் ட்ரான்மிஷனிற்காக ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் செயல்படக்கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

பஜாஜ் நிறுவனம் கேடிஎம் 390 அட்வென்ஜெர் போன்று டோமினார் 400 மாடலின் அட்வென்ஜெர் வெர்சனை இதுவரை சந்தைக்கு கொண்டுவரவில்லை. ஆனால் இந்த புதிய பைக்கின் அறிமுகத்தை மிக விரைவில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

ஏனெனில் மலைத்தொடர்களில் பயணம் செய்வதற்கு பஜாஜ் டோமினாரின் கஸ்டமைஸ்ட் பைக்குகள் மிகவும் ஏற்றதாக பார்க்கப்படுகின்றன. இந்த வகையில் ஆட்டோலாக் டிசைன் நிறுவனத்தின் இந்த கஸ்டமைஸ்ட் டோமினார் எக்ஸ்ப்ளோரர் பைக்கும் இத்தகைய பயணங்களுக்கு கச்சிதமாக பொருந்தும்.

Image Courtesy: Autologue Design

Most Read Articles
English summary
Bajaj Dominar Adventure mod by Autologue Design called Xplorer
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X