பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 150 பிஎஸ்6 பைக் மாடலின் விலையை மீண்டும் ஒரு முறை உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

பஜாஜ் பல்சர் 150 பைக் சந்தையில் நியான், சிங்கிள் டிஸ்க் மற்றும் இரட்டை டிஸ்க் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலை முன்னதாக ரூ.90,387-ல் இருந்து ரூ.98,566 வரையில் இருந்தது.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

ஆனால் தற்போது இவற்றின் விலைகளில் 999 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பல்சர் 150 பைக்கின் நியான் வேரியண்ட் ரூ.91,386-லும், சிங்கிள் டிஸ்க் வேரியண்ட் ரூ.95,430-லும், இரட்டை டிஸ்க் ரூ.99,565-லும் இனி விற்பனை செய்யப்படவுள்ளன.

Variant Old Price New Price Hike
Neon ₹90,387 ₹91,386 ₹999
Single Disc ₹94,432 ₹95,430 ₹998
Twin Disc ₹98,566 ₹99,565 ₹999
பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

பிஎஸ்6 தரத்தில் பல்சர் 150 பைக் மாடலை கடந்த பிப்ரவரி மாதத்தில் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. அதில் இருந்து இரண்டாவது முறையாக இந்த் 150சிசி பைக்கின் விலை அதிகரிப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதத்தில் ரூ.4,500 வரையில் இந்த பைக்கின் விலை உயர்த்தப்பட்டிருந்தது.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் பிஎஸ்6 தரத்தில் 150சிசி, சிங்கிள்-சிலிண்டர், எஸ்ஒஎச்சி, ஏர்-கூல்டு என்ஜின் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பிஎஸ்4 வெர்சனில் கார்புரேட்டட் பொருத்தப்பட்டு வந்தது.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

இந்த பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 13.8 பிஎச்பி பவரையும் 13.25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த 2020ஆம் வருடத்திற்காக அப்டேட் செய்யப்பட்டுள்ள பல்சர் 150 பைக்கில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

இதனால் பெரிய ஹெட்லேம்ப் அமைப்பு, உருவத்தில் பெரிய எரிபொருள் டேங்க் உள்ளிட்டவை கூர்மையான எக்ஸ்டென்ஷன்ஸ் மற்றும் டெயில் செக்‌ஷன் உடன் தொடர்ந்துள்ளன. மற்ற அம்சங்களாக இந்த பைக்கில் எல்இடி பொஷிசன் லேம்ப்கள், ஆரஞ்ச் பேக்லிட் எல்சிடி திரை மற்றும் ஒளியூட்டப்பட்ட ஸ்விட்ச்கியர் உடன் அனலாக் கன்சோல் போன்றவை இந்த பைக்கில் உள்ளன.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸை முன்புறத்திலும், ட்யூல் ஷாக் அப்சார்பர்ஸை பின்புறத்திலும் கொண்டுள்ள இந்த பைக்கில் ப்ரேக்கிங்கிற்கு டிஸ்க்-ட்ரம் ப்ரேக் கலவை இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக் என்ற கூடுதல் தேர்வுடன் வழங்கப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கிற்கு போட்டியாக சந்தையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் ஹோண்டா யூனிகார்ன் உள்ளிட்ட பைக் மாடல்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar 150 BS6 prices hiked once again!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X