பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

பஜாஜ் ஆட்டோ & கேடிஎம் நிறுவனங்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் தயாரிப்பில் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளன. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கவுள்ள இந்த எலக்ட்ரிக் வாகனங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், மொபெட்கள் மற்றும் பை-சைக்கிள்கள் உள்ளிட்டவை அடங்கும். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்த தயாரிப்பு வாகனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

பஜாஜ்-கேடிஎம் கூட்டணி நிறுவனங்களின் இந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு பணிகள் 2022ல் புனேவில் உள்ள பஜாஜ்-ன் சாகான் தொழிற்சாலையில் துவங்கவுள்ளன. மேலும் இவ்வாறு தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு அனுப்பப்படவுள்ளன.

பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

பஜாஜ்-கேடிஎம் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் இந்த எலக்ட்ரிக் தயாரிப்புகள் வழக்கமான அதே ப்ளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்படவுள்ளன. இத்தகைய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் 3kW-ல் இருந்து 10kW ஆற்றலை கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் கேடிஎம் நிறுவனமும் கடந்த 2007ல் இருந்து கூட்டணியில் உள்ளன. அப்போதில் இருந்து இவ்விரு நிறுவனங்களில் இருந்து ஏகப்பட்ட தயாரிப்புகள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. இதில் முதல் தயாரிப்பு பைக் மாடலாக பஜாஜ் பல்சர் என்எஸ்200 விற்பனைக்கு வந்தது.

பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

இந்த மோட்டார்சைக்கிளில் கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக்200 பைக்கின் என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த கூட்டணியால் தற்போது ஆஸ்திரியன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் பெரும்பாலான அனைத்து பைக் மாடல்களின் தயாரிப்பும் புனேவில் உள்ள பஜாஜின் தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

இதுமட்டுமின்றி இந்த கூட்டணி செயல்பாட்டால் பஜாஜின் சமீபத்திய அறிமுகமான சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பிய சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறைந்த ஆற்றல் கொண்ட ஸ்கூட்டர்கள் மற்றும் மொபெட்களை தவிர்த்து, பஜாஜ், கேடிஎம்-ன் கூட்டணி முழுக்க முழுக்க ஹை-பவர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் தயாரிக்கப்பிற்காக தானாம்.

கேடிஎம் நிறுவனம் ஏற்கனவே கேடிஎம் எஸ்எக்ஸ்-இ5 மற்றும் ஹஸ்க்வர்னா இஇ5 சீரிஸ் தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களை ஐரோப்பாவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டும் தான் சந்தைப்படுத்தி வருகிறது.

பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

சேத்தக் எலக்ரிக் ஸ்கூட்டரில் 4kW எலக்ட்ரிக் மோட்டாரை பஜாஜ் நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் 3kWh லித்தியம்-இரும்பு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக சிங்கிள் சார்ஜில் 95 கிமீ தூரம் வரை ஸ்கூட்டரை இயக்க முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் 65 km/h ஆகும்.

புதிய எலக்ட்ரிக் தயாரிப்புகளின் பணிகள் 2022-ல் துவங்குவது ஒருபுறம் இருக்க, பஜாஜ்-கேடிஎம் நிறுவனங்களின் மொத்த தயாரிப்பு வேலைகளும் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை சந்தைப்படுத்த பல வருடங்களாக முயற்சித்து வருகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Bajaj-KTM Partnership Working On Electric Scooters: India Launch Expected Soon
Story first published: Monday, April 13, 2020, 19:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X