பஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...

வரப்போகும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பிளாட்டினா 100, பிளாட்டினா 110எச் கியர் உள்பட அதன் பல்சர் 125சிசி மோட்டார்சைக்கிளுக்கும் சிறப்பு பண தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...

பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபலமான பைக்குகளாக உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்சமயம் பல்சர் வரிசையில் 9 பைக்குகளை தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

பஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...

கொரோனாவினால் மற்ற நிறுவனங்களை போல் தயாரிப்புகளின் விற்பனையில் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ள பஜாஜ் நிறுவனம் அவற்றை வரப்போகும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் சரிக்கட்ட தீவிரமாக இறங்கியுள்ளது.

பஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...

இதன் வெளிப்பாடே இந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள். இந்த 2020 அக்டோபர் மாதம் வரையில் மட்டுமே பஜாஜ் பைக்குகளுக்கு வழங்கப்படவுள்ள பண தள்ளுப்படி சலுகைகள் அட்டவணையாக இதோ...

Model Price Cash Discount
Platina 100 ES Drum Rs58,605 Rs1,600
Platina 100 ES Disc Rs60,826 Rs2,800
Platina 110 H Gear Disc Rs63,027 Rs2,500
Pulsar 125 Drum Rs72,122 Rs2,500
Pulsar 125 Split Seat Drum Rs73,274 Rs3,000
Pulsar 125 Disc Rs76,922 Rs2,000
Pulsar 125 Split Seat Disc Rs80,218 Rs2,000
பஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...

ரூ.58,605 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் பஜாஜின் ஆரம்ப நிலை பிளாட்டினா 100 இஎஸ் ட்ரம் பைக்கிற்கு ரூ.1,600 அளவிலும், ரூ.60,826-ல் விற்பனை செய்யப்படும் இதன் டிஸ்க் வேரியண்ட்டிற்கு ரூ.2,800 அளவிலும் பண தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...

பஜாஜ் பிளாட்டினா 110எச் கியர் டிஸ்க் பைக்கிற்கு ரூ.2,500 அளவில் பண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.63,027 ஆகும். ஏற்கனவே கூறியதுபோல் இந்த பிளாட்டினா வரிசை மட்டுமில்லாமல் பல்சர் 125 மோட்டார்சைக்கிளுக்கும் பண்டிகை காலத்திற்கான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...

இதன்படி பல்சர் பைக்குகளிலேயே விலை குறைவானதாக உள்ள பல்சர் 125 ட்ரம் பைக்கை வாங்குவோர் ரூ.2,500 வரையிலும், பிளவுப்பட்ட இருக்கை அமைப்புடன் இந்த பைக்கை வாங்குவோர் ரூ.3,000 வரையிலும் பணத்தை சேமிக்க முடியும். இவை இரண்டின் எக்ஸ்ஷோரூம் விலை முறையே ரூ.72,122 மற்றும் ரூ.73,274 ஆகும்.

பஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...

பல்சர் 125 பைக் டிஸ்க் ப்ரேக் உடனும் கிடைக்கிறது. ரூ.76,922 என்ற எக்ஸ்ஷோரூம் விலையுடன் விற்பனை செய்யப்படும் பல்சர் 125 டிஸ்க் பைக்கிற்கு ரூ.2,000-மும், இதன் பிளவுப்பட்ட இருக்கை வெர்சனுக்கு ரூ.2,000-மும் பணம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிளவுப்பட்ட இருக்கை மற்றும் டிஸ்க் ப்ரேக்குகள் உடன் கிடைக்கும் பல்சர் 125 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.80,218 ஆக உள்ளது.

Most Read Articles

English summary
Bajaj Offering Cash Discounts With Platina & Pulsar 125 This Festive Season
Story first published: Thursday, October 15, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X