பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் என்எஸ் மற்றும் ஆர்எஸ் வரிசை மோட்டார்சைக்கிள்களுக்கு புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

இந்திய சந்தையில் பிரபலமானதாக உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் என்எஸ் & ஆர்எஸ் வரிசை பைக்குகளில் தற்சமயம் என்எஸ்160, என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றில் 160சிசி பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.08 லட்சமாக உள்ளது. என்எஸ்200-ன் விலை ரூ.1.31 லட்சமாக உள்ளது.

பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

இவை இரண்டிற்கும் நெருப்பின் சிவப்பு, மெட்டாலிக் முத்தின் வெள்ளை, பியூட்டர் க்ரே மற்றும் பிளாஸ்மா சாடின் நீலம் என்ற நான்கு நிறங்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. ரூ.1.52 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் ஆர்எஸ்200 பைக்கிற்கு நெருப்பின் சிவப்பு,மெட்டாலிக் முத்தின் வெள்ளை மற்றும் பிளாஸ்மா நீலம் என்ற மூன்று நிறத்தேர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

அதேநேரம் இந்த புதிய நிறத்தேர்வுகளில் பைக்கின் அலாய் சக்கரங்கள், முன் & பின் ஃபெண்டர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். பெயிண்ட் தேர்வுக்கு ஏற்றப்படி பைக்கில் வழங்கப்படும் கிராஃபிக்ஸும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கமான என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளில் இருந்து புதிய நிறம் வேறுபடுவதற்காக இருக்கை அமைப்பும் வித்தியாசமான முறையில் வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

புதிய நிறத்தேர்வுகள் அறிமுகப்படுத்தியதை குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை அதிகாரி நாராயணன் சந்தாரராமன் கூறுகையில், "பல்சர் ஆர்எஸ்200 மற்றும் என்எஸ்200 எப்போதும் செயல்திறன் கொண்ட மோட்டார்சைக்கிளிங்கில் சர்வதேச தொழில்நுட்பத்தை பெறுவதன் மூலம் தனித்து நிற்கின்றன.

பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

வரப்போகும் பண்டிகை காலத்திற்காக, விவேகமான மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களுக்கு ஸ்போர்ட்டியான செயல்திறன் மற்றும் கண்களைக் கவரும் புதிய நிறங்கள் ஆகியவற்றின் சரியான கலவையை நாங்கள் வழங்குகிறோம். இது பல்சரின் சந்தை தலைமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என கூறினார்.

பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

பஜாஜ் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிறத்தேர்வுகள் தவிர்த்து வேறெந்த அப்கிரேடும் வழங்கப்படவில்லை. காஸ்மெட்டிக் மாற்றங்களும் பெரிய அளவில் இல்லை. என்ஜின் அமைப்புகள் முற்றிலும் மாற்றம் இல்லாமல்தான் தொடரவுள்ளன. என்எஸ்160 பைக்கில் அதிகப்பட்சமாக 176 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 150சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

பஜாஜ் என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 பைக்குகளில் 199சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. கேடிஎம் ட்யூக்200 பைக்கிலும் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 23 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...

பஜாஜின் என்எஸ் மற்றும் ஆர்எஸ் பைக்குகள் இந்திய சந்தையில் ஏற்கனவே பிரபலமானவைகளாக உள்ளன. இந்த நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நிறத்தேர்வுகள் நிச்சயம் இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. குறிப்பாக பண்டிகை காலத்திற்கு இத்தகைய அப்கிரேட்கள் தேவையான ஒன்றே.

Most Read Articles

English summary
Bajaj Pulsar NS & RS Range Introduced In New Colours: Prices Start At Rs 1.08 Lakh
Story first published: Sunday, October 18, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X