எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

எதிர்பார்த்திரா அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

பட்ஜெட் வாகன விரும்பிகளை குதூகலிக்க செய்யும் விதமாக பஜாஜ் நிறுவனம், அதன் விற்பனையில் வரிசையில் கூடுதல் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரகின்றது. அந்தவகையில், பிளாட்டினா மாடல் வரிசையில் டிஸ்க் பிரேக் வேரியண்டை அந்நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கில் டிஸ்க் பிரேக் சேர்ப்பைத் தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

ஆனால், இதன் விலையில் லேசான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிஸ்க் அம்சம் சேர்க்கப்பட்டிருப்பதால் இந்த விலையுர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பஜாஜ் பிளாட்டினா 100 டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ரூ. 59,373 ஆக உள்ளது. இது பிளாட்டினா இஎஸ் மாடலைக் காட்டிலும் நான்காயிரம் ரூபாய் அதிகம் ஆகும்.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் மாடல் ரூ. 55,546 என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. அதேசமயம், இதன் ஆரம்ப நிலை மாடலைப் பார்த்தோமேயானால் அதன் விலை ரூ. 49,261 ஆக உள்ளது. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

முன்னதாக இரு நிலை தேர்வுகளை மட்டுமே வழங்கி வந்த பிளாட்டினா 100 வரிசையில் புது முக இணைவால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது பட்ஜெட் வாகன பிரியர்களை கூடுதலாக கவர உதவும்.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

புதிய பஜாஜ் பிளாட்டினா 100 டிஸ்க் வேரியண்டில் பாதுகாப்பு அம்சத்தைக் கூட்டும் விதமாக சிபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பிற இரு வேரியண்டுகளைக் காட்டிலும் இது பாதுகாப்பு கூடுதலாக இருக்கும். இந்த அம்சங்களினால்தான் பிளாட்டினா 100 வரிசையில் விலையுயர்ந்த பைக்காக டிஸ்க் பிரேக் வேரியண்ட் உருமாறியிருக்கின்றது.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

இதுபோன்ற டிஸ்க் பிரேக் ஆப்ஷனை அனைத்து பட்ஜெட் வாகனங்களிலும் நம்மால் பெற்றுவிட முடியாது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் உயர் ரக மாடல் மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தும் வாகனங்களில் மட்டுமே வாகன உற்பத்தி நிறுவனங்கள் டிஸ்க் பிரேக்கை வழங்கி வருகின்றன. இதனை மாற்றியமைக்கும் விதமாக பஜாஜ் 102 சிசி திறன் கொண்ட பைக்கிலேயே அறிமுகம் செய்துள்ளது.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

ஆம், பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கில் 102 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 4 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இது, உச்சபட்சமாக 7.7 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க்கை திறனையும் வெளிப்படுத்தும். இதேபோன்று, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும்.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

இந்த எஞ்ஜின் பிஎஸ்-6 தரத்திலானது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்த வசதிக்காக எலெக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டத்தை பஜாஜ் பயன்படுத்தியுள்ளது. இது குறைந்த எரிபொருள் பயன்பாட்டில் நல்ல மைலேஜை வழங்க உதவும். இத்துடன், இது 50 சதவீத குறைந்த கார்பன் மோனாக்ஸைடையே வெளிப்படுத்தும்.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

ஆகையால், புதிய பிளாட்டினா 100 பைக் பட்ஜெட் வாகன விரும்பிகளுக்கு மட்டுமின்றி சுற்றுப்புறச் சூழலுக்கும் நண்பனாக செயல்படும். விலை குறைந்த பைக்காக இது இருந்தாலும் இதில் சிறப்பம்சங்களை வழங்க பஜாஜ் தவறவில்லை.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

அந்தவகையில், புதிய பிளாட்டினா 100 டிஸ்க் பிரேக் வேரியண்டில் பைக்கில் எஞ்ஜினை பரிசோதிக்கும் மின் விளக்கு, அப்கிரேட் செய்யப்பட்ட ஒயரிங் மற்றும் ஃப்யூஸ் பாக்ஸ், புதுப்பிக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், பின் பக்கத்தில் டயர் ஹஃகர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்கள் பிரீமியம் தோற்றத்தை அந்த பைக்கில் வழங்கும் வகையில் இருக்கின்றது.

எதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது!

பஜாஜ் நிறுவனம் அண்மையில்தான் அதன் பிளாட்டினா சிடி100 மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது புதிய மாசு உமிழ்வு விதியான பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தி அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையிலேயே பஜாஜ் பிளாட்டினாவில் புது தேர்வை வழங்கும் விதமாக டிஸ்க் பிரேக் வேரியண்டை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது பிளாட்டினா ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Platina 100 Disc Brake Variant Launched In India Rs. 59k. Read In Tamil.
Story first published: Tuesday, July 7, 2020, 19:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X