பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாஸக மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் பஜாஜ் பிளாட்டினா எச் கியர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்தியாவின் மிக குறைவான பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் பஜாஜ் பிளாட்டினா சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. விலை குறைவு என்பதுடன் அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு போன்றவை இந்த பைக்கிற்கு ஊரக பகுதிகளில் மிக வலுவான சந்தையை பெற்றுத் தந்துள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினுடன் பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்த பைக்கில் இருக்கும் 115.45 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.44 பிஎச்பி பவரையும், 9.81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய மாடலைவிட பவரை வெளிப்படுத்தும் திறன் 0.6 பிஎச்பி வரை குறைந்துள்ளது. டார்க் திறனில் மாறுபாடு இல்லை. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

பிஎஸ்6 எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளதை தவிர்த்து, வேறு எந்த பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த பைக்கின் டிசைன், இதர அம்சங்கள் தொடர்ந்து மாற்றங்கள் இல்லாமல் தக்க வைக்கப்பட்டுள்ளன.

MOST READ: ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்த பைக்கில் ஹாலஜன் பல்புடன் ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ப்ளை விண்ட்ஸ்க்ரீன், சற்றே மாறுதல் செய்யப்பட்ட டர்ன் இன்டிகேட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் நைட்ராக்ஸ் சார்ஜ்டு ட்வின் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் இடம்பெற்றுள்ளன.

MOST READ: இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

அதேபோன்று, முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 110 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. பிஎஸ்4 மாடலில் இருந்த இருசக்கரங்களிலும் டிரம் பிரேக் கொண்ட வேரியண்ட் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக் 2006 மிமீ நீளமும், 713 மிமீ அகலமும், 1100 மிமீ உயரமும், தரையிலிருந்து 804 மிமீ உயரத்தில் இருக்கை அமைப்பு கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 122 கிலோ வெற்று எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: இந்தியாவில் கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு தக்கவாறு தேர்வு செய்து கொள்ளும் வகையில், இந்த பைக் கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

புதிய பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடலுக்கு ரூ.59,802 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். பிஎஸ்4 மாடலைவிட பிஎஸ்6 மாடலின் விலை ரூ.3,400 வரை கூடுதலாகி உள்ளது. இருப்பினும், பட்ஜெட் மார்க்கெட்டில் மதிப்புமிக்க தேர்வாக தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது.

Most Read Articles

English summary
Bajaj Auto has silently launched the Platina H Gear 110 BS6 motorcycle in the Indian market. The new Bajaj Platina H Gear BS6 is the brand's entry-level commuter offerings and is offered with a price tag of Rs 59,802, ex-showroom (Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X