பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

பஜாஜ் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், தனது பிரபலமான பல்சர் 150 மற்றும் பல்சர் 150 ட்வின் டிஸ்க் வெர்சன் பைக்குகளை பிஎஸ்6 தரத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்6 மாற்றத்தால் சில அப்டேட்களை பெற்றுள்ள இந்த இரு பைக்குகளின் விலைகளும் ரூ.9,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

பஜாஜ் நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடல்களாக உள்ள இந்த பல்சர் வரிசை பைக்குகளில் இந்நிறுவனம் புதியதாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தின் மூலமாக இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் அமைப்பு மட்டுமின்றி, பவர் டெலிவிரியையும், மெல்லிய தொடுதல் மூலம் ஸ்டார்ட் ஆகும் வசதியையும் மற்றும் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்திற்கு ஏற்ற எரிபொருள் திறனையும் இந்த புதிய பிஎஸ்6 பல்சர் பைக்குகள் பெற்றுள்ளன.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

குறைவான பராமரிப்பு செலவை கொண்டுள்ள இந்த சிஸ்டம், இந்த இரு பைக்குகளிலும் உள்ள 149.5சிசி சிங்கிள்-சிலிண்டர் ட்வின் ஸ்பார்க் டிடிஎஸ்-ஐ என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினானது அதிகப்பட்சமாக 14 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்-ல் பைக்கிற்கு வழங்குகிறது.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு தற்போது அறிமுகமாகியுள்ள 2020 பஜாஜ் பல்சர் 150 மாடல் கூடுதலாக ப்ளாக் க்ரோம் மற்றும் ப்ளாக் ரெட் என்ற இரு புதிய நிறத்தேர்வுகளை பெற்றுள்ளது. இத்தகைய அப்டேட்களால் ரூ.9,000 வரையில் விலை அதிகரிப்பை பெற்றுள்ள இந்த இரு பல்சர் மாடல்களும் எக்ஸ்ஷோரூமில் இனி முறையே ரூ.94,956 மற்றும் ரூ.98,835 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

இன்னும் சில வாரங்களில் விற்பனை வரவுள்ள இந்த பிஎஸ்6 பைக்குகளில் 149.5சிசி என்ஜின் புதிய ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தால் 500 ஆர்பிஎம்-க்கு முன்பாகவே 0.15 என்எம் குறைந்து 6,500 ஆர்பிஎம்-ல் 13.25 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவுள்ளது. மற்றப்படி இந்த பிஎஸ்6 என்ஜின் பைக்கிற்கு வழங்கவுள்ள பிஎச்பி ஆற்றலில் எந்த மாற்றமும் இல்லை.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோப் ஃபோர்க்கும், மோனோஷாக்கும் எந்த அளவு மாற்றமும் இன்றி இந்த பிஎஸ்6 பல்சர் பைக்குகளில் தொடரவுள்ளன. ஆனால் ப்ரேக்கிங்கிற்கு 20 மிமீ பெரியதாக்கப்பட்ட முன்சக்கர டிஸ்க் தற்போது 260மிமீ-ல் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் முன்புறத்தில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் உள்ளது.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

பின்புற ப்ரேக்கிங் பணியை கவனிக்க 130மிமீ டிஸ்க்/ட்ரம் பல்சர் வேரியண்ட்டை பொறுத்து வழங்கப்பட்டுள்ளது. R17 ட்யூப்லெஸ் டயர் இந்த பிஎஸ்6 பைக்குகளில் முன்புறத்தில் 80/100 என்ற அளவிலும், பின்சக்கரத்தில் 100/90 என்ற அளவிலும் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

15 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்கை கொண்டுள்ள இந்த புதிய பல்சர் பைக்குகளின் நீளம் 2,055மிமீ ஆகவும், அகலம் 10மிமீ அதிகரிக்கப்பட்டு 765மிமீ ஆகவும், உயரம் 1,060மிமீ ஆகவும் உள்ளது. இந்த பிஎஸ்6 பைக்குகளின் வீல்பேஸ் அளவு 1,320மிமீ மற்றும் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 165மிமீ ஆகும்.

பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...!

பஜாஜ் நிறுவனத்தின் புதிய இந்த இரு பிஎஸ்6 பல்சர் பைக்குகளும் 148 கிலோ எடையை கொண்டுள்ளன. பெட்ரோல் முழுவதும் நிரப்பினால் இந்த எடை அளவு மேலும் 4 கிலோ அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்பே கூறியதுபோல் பல வருடங்களாக பஜாஜ் நிறுவனத்தின் சிறந்த விற்பனை பைக் மாடல்களாக உள்ள இவற்றின் விற்பனை பிஎஸ்6 அப்டேட்டால் எந்த அளவிற்கு மாற்றமடையவுள்ளது என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar 150 BS6 Launch India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X