பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

இளைஞர் ஒருவர் பஜாஜ் பல்சர் 150 மாடல் பைக்கை, மிகக் குறைந்த வேலைப்பாட்டில் 220 வெர்ஷனுக்கு இணையாக அப்கிரேட் செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

பஜாஜ் பல்சர், இந்த பெயரை உச்சரிக்கும்போதே இந்திய இளைஞர்கள் பலரின் முகத்தில் நம்மால் புன்னகையை பார்க்க முடியும். அந்தளவிற்கு இந்தியர்கள் பலரின் வாழ்க்கையோடு இணைந்திருக்கின்றது பல்சர் பைக்குகள். நாட்டில் சக்தி வாய்ந்த மோட்டார்சைக்கிள்களுக்கான டிரெண்டை ஏற்படுத்திய பைக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

எனவேதான் இந்த பைக்கைச் சிறப்பிக்கும் விதமாக பஜாஜ் நிறுவனம், அதில் பல்வேறு தேர்வுகளை இந்தியர்களுக்கு வழங்கி வருகின்றது.

அந்தவகையில், பஜாஜ் நிறுவனம், பல்சர் வரிசையில் அறிமுகம் செய்திருக்கும் அதிக சக்தி வாய்ந்த மாடலாக பல்சர் 220 மாடல் இருக்கின்றது.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

இதுவே, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சக்தி வாய்ந்த மோட்டார்சைக்கிள் முதன்மை இடத்தையும் பிடித்திருக்கின்றது. அதேசமயம், பல்சர் வரிசையில் விற்பனைக்கு கிடைக்கும் சற்று விலையுயர்ந்த பைக்கும் இதுவாக இருக்கின்றது. எனவேதான், இதை எட்ட முடியாத இளைஞர்கள் சிலர் பல்சர் 150 மாடலை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இவர்களுக்கு எப்போது 220 மாடல் ஓர் கண் இருந்த வண்ணமே இருக்கின்றது.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

அந்தவகையில், பஜாஜ் பல்சர் 220 மீது அதிகம் பிரிமியம் கொண்ட ஓர் இளைஞர்தான் தற்போது தற்போது தனது பல்சர் 150 மாடலை 220 எஃப் வெர்ஷனுக்கு இணையாக மாடிஃபை செய்திருக்கின்றார். இதுபோன்று வாகனத்தை மாடிஃபை செய்வது இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி குற்றமாகும். இருப்பினும், இளைஞரின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்தான் இத்தகைய மாடிஃபிகேஷனை தனது பல்சர் 150 மாடலில் செய்துள்ளார். இதனால், அதன் உண்மையான தோற்றத்தை இழந்து அச்சு அசலாக பல்சர் 220 எஃப் மாடலாகவே அது மாறியுள்ளது.

இந்த இளைஞர் இதுபோன்ற வாகனங்களை மாடிஃபை செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக வீட்டிலேயே வைத்து ஃபேக்ஸ்வேகனின் பீட்டில் மாடல் காரை இவர் தயாரித்திருந்தார். அதுவும், இதனை பைக்கின் எஞ்ஜினைக் கொண்டு கஸ்டம் செய்திருந்தார்.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

இந்த நிலையில்தான் தற்போது பஜாஜ் பல்சர் 150 பைக்கை 220 எஃப் மாடலாக மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த வீடியோவை சுடுஸ் கஸ்டம் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்காக அவர் பெரியளவில் தொகையையோ அல்லது உபகரணங்களையோ பயன்படுத்தவில்லை. 220 மாடலின் முகப்பு பகுதியை மட்டும் கூடுதலாக அதில் சேர்த்துள்ளார்.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

குறிப்பாக, ஹெட்லைட் மற்றும் முன் வீல் மட்குவார்ட் உள்ளிட்ட சில பாகங்களை மட்டுமே அவர் மாற்றியிருக்கின்றார். இதைதான் நம்மால் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவிலும் பார்க்க முடிகின்றது. ஆனால், மிகக் குறைந்த மாடிஃபிகேஷனிலேயே பல்சர் 150 பைக், 220 எஃப் அவதாரத்திற்கு உருமாறியது.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

எனவே, இந்த வீடியோவைப் பலரின் மத்தியில் பைக்கை மாடிஃபை செய்வது இவ்வளவு சுலபமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. பல்சர் 150 அதன் உயர் நிலை வேரியண்டான 220 எஃப் மாடலை சற்றே ஒத்ததாக இருக்கின்றது. இதனால், மிக சுலபமாக மாடிஃபிகேஷனை அந்த பைக் ஏற்றுக் கொண்டது. இதுவே, பஜாஜில் விற்பனையாகும் வேறு ஏதேனும் ஓர் மாடலை இதுபோன்ற மாடிஃபிகேஷனுக்கு உட்படுத்தியிருந்தால் அதிக தொகை மற்றும் வேலை எடுத்திருக்கும்.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

ஆனால், இதில் எதையுமே பஜாஜ் பல்சர் 150 பைக் வழங்கவில்லை. குறைந்தளவு நேரத்திலேயே மாற்றத்தைக் கணக்கச்சிதமாகப் பெற்றுக் கொண்டது.

இந்த உருமாற்றத்தின் ஒரு பங்காக 150 மாடல் பல்சரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரும் நீக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 220 எஃப் மாடலுக்கு ஏற்ற அது மாற்றியமைக்கப்பட்டது.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

இத்துடன், புதிதாக சேர்க்கப்பட்ட அனைத்து பாகங்களுக்கும் கருப்பு நிறம் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இவற்றினால், பஜாஜ் பல்சர் 150 முழுமையாக 220 மாடலாகவே மாறியது.

அதேசமயம், உருமாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றங்களும் இந்த பைக்கில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பஜாஜ் பல்சர் 150 பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே எஞ்ஜின் இதிலும் இடம்பெற்றிருக்கின்றது.

பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடலாக மாறிய பல்சர் 150... இதை மாற்றுவது இவ்ளோ சுலபமா? வீடியோ!

தற்போது புதிய பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்-6 மாடல் பைக் ரூ. 9 ஆயிரம் விலையுயர்வுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2020 பஜாஜ் பல்சர் 150 மாடல்கள் கூடுதலாக ப்ளாக் க்ரோம் மற்றும் ப்ளாக் ரெட் என்ற இரு புதிய நிறத்தேர்வுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றங்களின் காரணமாகவே ரூ. 9 ஆயிரம் வரை விலை அதிகரிப்பை பெற்றுள்ளது.

இந்த பிஎஸ்6 பைக்குகளில் 149.5சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிதாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் உச்சபட்சமாக 13.25 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

Most Read Articles

English summary
Bajaj Pulsar 150 Converted Into Pulsar 220F. Read In Tamil.
Story first published: Tuesday, June 30, 2020, 14:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X