ரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட 2020 பல்சர் 180எஃப் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எக்ஸ்ஷோரூமில் ரூ.1.07 லட்சத்தை விலையாக பெற்றுள்ள இந்த பல்சர் 180சிசி பைக்கை பற்றி இனி விரிவாக பார்ப்போம்.

ரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...

இந்த 2020 வெர்சன் பல்சர் பைக்கில் 178.6சிசி என்ஜினை பஜாஜ் நிறுவனம் பொருத்தியுள்ளது. கார்ப்புரேட்டருக்கு பதிலாக எலக்ட்ரானிக் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இந்த என்ஜின் அமைப்பில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

ரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...

இதனால் இந்த 178.6சிசி என்ஜின் வழக்கமான 8,500 ஆர்பிஎம்-ல் 16.8 பிஎச்பி பவர் மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 14.52 என்எம் டார்க் திறனை தான் பைக்கிற்கு வழங்கவுள்ளது. என்ஜின் அமைப்பில் மாற்றம் தவிர்த்து இந்த புதிய பிஎஸ்6 பைக்கின் டிசைன் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

ரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...

முன்னதாக பஜாஜ் நிறுவனம் பல்சர் மாடலின் 220எஃப் வெர்சன் பைக்கையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. 2020 பல்சர் 220எஃப் பைக்கின் விலை சந்தையில் ரூ.1.17 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...

இந்த பல்சர் வரிசை பைக்கில் வழங்கப்பட்டுள்ள 220சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 20.12 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 18.55 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக்கை போல் இதன் தோற்றத்திலும் எந்த மாற்றத்தையும் பஜாஜ் நிறுவனம் கொண்டுவரவில்லை.

ரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...

இவை இரண்டுடன் பல்சர் வரிசையில் உள்ள அனைத்து பைக்குகளும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் எண்ட்ரீ-லெவல் மோட்டார்சைக்கிளான பல்சர் 125-ன் விலை ரூ.69,997 ஆகவும், பல்சர் 150-ன் விலை ரூ.94,957 ஆகவும் எக்ஸ்ஷோரூமில் உள்ளது. பல்சர் 150-ன் ட்வின் டிஸ்க் வெர்சன் சந்தையில் ரூ.98,835 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...

இளைஞர்களின் ஃபேவரட்டாக உள்ள பல்சர் என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 பைக்குகளின் விலைகளில் பல்சர் என்எஸ்160 பைக்கை போல் எந்த மாற்றமும் இல்லை. என்எஸ்160 சந்தையில் ரூ.94,195-ஐயும், என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 முறையே ரூ.1.14 லட்சம் மற்றும் ரூ.1.42 லட்சத்தையும் விலையாக கொண்டுள்ளன.

ரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...

பஜாஜ் நிறுவனம், உலகம் நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்கனவே தனது தொழிற்சாலையை தற்காலிகமாக மூடிவிட்டது. மேலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சமாளிக்க, சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.100 கோடியை இந்திய அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணவும்.

Most Read Articles
English summary
2020 Bajaj Pulsar 180F BS6 Launched; Priced At ₹ 1.07 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X