சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

இன்னும் சில மாதங்களில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் புதிய பெயிண்ட் அமைப்புகளை பெறவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள டெலிவிஷன் கமர்ஷியல் வீடியோ (டிவிசி)-ஐ இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிவிசி வீடியோவில், ‘சாக் லைன்ஸ்' என்ற வாசகத்துடன் தற்போதைய கொரோனா காலத்தில் சமூக இடைவெளி பேணும் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

மேலும் இந்த வீடியோவில், என்எஸ்200 உள்பட வெவ்வேறு விதமான பல்சர் மாடல்களில் ரைடர்கள் ஸ்டண்ட்களை செய்கிறார்கள். இதில் என்எஸ்200 மோட்டார்சைக்கிள்கள் புதிய சிவப்பு மற்றும் வெள்ளை பெயிண்ட் அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

இந்த பெயிண்ட் அமைப்பில் பெட்ரோல் டேங்க் மற்றும் ஹெட்லேம்ப் கௌல் உள்ளிட்டவை சிவப்பு நிறத்திலும், பெரிமீட்டர் ஃப்ரேம் மற்றும் அலாய் சக்கரங்கள் வெள்ளை நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற ட்ரிம் துண்டுகள் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

இந்த புதிய பெயிண்ட் அமைப்பு நாக்டு மோட்டார்சைக்கிளான என்எஸ்200-க்கு புத்த்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குகிறது. இதனுடன் மற்றொரு மாற்றமாக பின்பக்க க்ராப்-ரெயில் மிகவும் வழக்கமான ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது.

சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

பஜாஜ் நிறுவனம் தற்சமயம் பல்சர் என்எஸ்200 பைக்கை கிராஃபைட் கருப்பு, மிராஜ் வெள்ளை, நெருப்பின் மஞ்சள் மற்றும் காட்டின் சிவப்பு என்ற 4 விதமான நிறங்களில் வழங்கி வருகிறது. இந்த பெயிண்ட் அமைப்புகள் அனைத்தும் ட்யூல்-டோன் தீம்-ல் வழங்கப்படுகின்றன.

சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

பஜாஜ் பல்சர் என்எஸ்200-ல் 199.5சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-ல் 24.1 பிஎச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 18.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்காக ப்ரீ-லோடு டேம்பிங் உடன் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிற்கு டிஸ்க் ப்ரேக்குகள் முன்புறத்தில் 300மிமீ-லும், பின்புறத்தில் 230மிமீ-லும் வழங்கப்படுகின்றன. பல்சர் என்எஸ்200-ன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.29 லட்சமாக உள்ளது.

சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...

விற்பனையில் இந்த பஜாஜ் பைக்கிற்கு கேடிஎம் ட்யூக்200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஹோண்டா ஹார்னெட் 2.0 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. இந்த நிலையில் இந்த பைக்கிற்கு வழங்கப்படவுள்ள புதிய பெயிண்ட் அமைப்பு அதன் விற்பனையை ஊக்கப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Bajaj Pulsar NS200 Expected To Receive New Colour Scheme: Teased Ahead Of Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X