பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பிராண்டில் பல பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும், பயன்பாட்டையும் பொறுத்து பல்வேறு வகைகளில் பல்சர் பைக்குகளில் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

இதில், பல்சர் ஆர்எஸ்200 பைக் பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகளுக்கு மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. முரட்டுத்தனமான தோற்றம், சிறந்த செயல்திறன் கொண்ட எஞ்சின், சரியான விலை போன்றவை இந்த பைக் இளைஞர்களை கவர்வதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பிஎஸ்6 எஞ்சினுடன் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்6 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்-6 மாடலில் 199.5 சிசி லிக்யூடு கூல்டு டிடிஎஸ்-ஐ (டிரிப்பிள் ஸ்பார்க்) எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் தற்போது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் கொடுக்கப்பட்டு பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

இந்த எஞ்சின் 23.8 பிஎச்பி பவரையும், 18.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

பிஎஸ்4 மாடலில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டது. ஆனால், பல்சர் ஆர்எஸ்200 மாடலில் சிங்கிள் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

எஞ்சினை தவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இரட்டை அறைகளுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடலானது ரேஸிங் ரெட், ரேஸிங் புளூ மற்றும் கிராஃபிக் பிளாக் என மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்6 மாடலுக்கு ரூ.1.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலைவிட ரூ.3,000 கூடுதல் விலையில் பிஎஸ்6 மாடல் வந்துள்ளது. பஜாஜ் பல்சர் குடும்பத்தில் மிக விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Bajaj Auto has launched RS200 bike with BS6 compliant engine in India and priced at Rs.1.45 Lakh (Ex-showroom, Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X