இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட பல்சர் ஆர்எஸ்200 மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. அப்டேட்டான என்ஜினை தவிர்த்து வேறெந்த மாற்றத்தையும் பெறாத இந்த 200சிசி பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.45 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

இந்த விலை தற்போதைய பிஎஸ்4 மாடலின் விலையை விட ரூ.3 ஆயிரம் அதிகமாகும். இந்த நிலையில் டீலர்ஷிப்களுக்கு சென்றுள்ள பஜாஜ் பிஎஸ்6 பைக்குகளின் லிஸ்ட்டில் ஆர்எஸ்200 மாடல் இரட்டை ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டின் விலை நிச்சயம் தற்போதைய சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டை விட சற்று அதிகமாக தான் இருக்கும்.

இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

இதற்கிடையிலும் பஜாஜ் நிறுவனம் இன்னமும் ஆர்எஸ்200 சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் பைக்கின் பெயரை தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வைத்துள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள ஆர்எஸ்200 மாடலில் வழக்கமான 199.5சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டு உள்ளது.

இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-ல் 24.1 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்-ல் 18.6 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கி வருகிறது. இந்த பிஎஸ்6 என்ஜினில் புதியதாக ப்ரீ-கேட்டலிடிக் கன்வெர்டர் பொருத்தப்பட்டு உள்ளது. ஆர்எஸ்200 பைக்கில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

மற்றப்படி இந்த பைக்கில் ட்யூல்-ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் செட்அப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்ட பாகங்கள் அப்படியே முந்தைய தலைமுறை பைக்கில் இருந்து தொடர்ந்துள்ளன.

இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

சஸ்பென்ஷனிற்கு ஆர்எஸ்200 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோ-ஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள 300மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் உள்ள 230மிமீ டிஸ்க்கும் கவனிக்கவுள்ளன.

இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

இவற்றுடன் தற்போது இரு சக்கரங்களிலும் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் எம்ஆர்எஃப் நைலோக்ரிப் டயர்கள் பொருத்தப்படுகின்றன. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்கிற்கு விற்பனையில் போட்டியினை அளிக்க கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி200 மோட்டார்சைக்கிள் தயாராக உள்ளது.

இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றிவிட்டதை தற்போது வெளியாகியுள்ள டீலர்ஷிப் லிஸ்ட்டின் மூலம் அறிய முடிகிறது. பல்சர் ஆர்எஸ்200 பைக் மாடல் தற்போது புதியதாக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை பெற்றிருப்பதால் இந்த பைக் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற வாகனமாக பார்க்கப்படுகிறது.

Source: Bikeadvice

Most Read Articles
English summary
Bajaj Pulsar RS200 Gets Dual-Channel ABS Along With The BS6 Upgrade
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X