இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்..

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஹோண்டா நிறுவனம் புதிய பைக்கை களமிறக்கியிருக்கியுள்ளது. இந்நிலையில், மற்றுமொரு நிறுவனமும் ராயல் என்ஃபீல்டிற்கு கூடுதலாக ஆப்பு வைக்கின்ற வகையில் புதுமுக பைக்கைக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வரும் நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு உள்ளது. கிளாசிக் மாடல் மோட்டார்சைக்கிள்களினாலயே இந்த இடத்தை ராயல் என்ஃபீல்டு பிடித்திருக்கின்றது என்றே கூறலாம். மேலும், தரமான எஞ்ஜின் மற்றும் கிளாசியான தோற்றம் உள்ளிட்டவையும் அதன் மோட்டார்சைக்கிளை இந்தியர்களிடத்தில் எப்போதும் பிரபலமான பைக்காக வைத்திருக்க உதவுகின்றது.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

இத்தகைய இடத்தைக் காலி செய்யும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. பிரபல ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், மிக சமீபத்தில் ஹைனெஸ் சிபி350 எனும் புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் களமிறக்கியது. இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றான கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

உருவம், எஞ்ஜின் திறன் என அனைத்திலும் கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் இப்-பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் வருகை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என அஞ்சிக் கொண்டிருந்த வேலையில், தற்போது மற்றுமொரு நிறுவனமும் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 பைக்கிற்கு கூடுதல் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த தயாராகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

ஹோண்டா நிறுவனத்தைத் தொடர்ந்து இந்த வரிசையில் பஜாஜ் நிறுவனமே இணைந்துள்ளது. ஆம், பஜாஜ் நிறுவனமே கிளாசியான தோற்றமுடைய புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்வதற்கான பணியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, நிச்சயம் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக அமையும் என கூறப்படுகின்றது.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

நியூரான் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதுமுக பைக்கிற்கு பஜாஜ் தற்போது காப்புரிமை பெற்றதற்கான தகவல்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன. இந்த தகவலின் அடிப்படையிலேயே பஜாஜ், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக புதுமுக பைக்கை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

ஏற்கனவே, சந்தையில் கிளாசிக் 350 பைக்கிற்கு எதிராக ஜாவா, பெனெல்லி இம்பீரியல் 400, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 உள்ளிட்ட பைக்குகள் அறிமுகமாகி, நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றநிலையில், பஜாஜ் நிறுவனமும் புதிதாக இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

Source: Auto Fabrica 6 & 7

அதேசமயம், புதிய பைக் அறிமுகம் மற்றும் காப்புரிமை பற்றிய எந்தவொரு அறிவிப்பையும் பஜாஜ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், விரைவில் இந்நிறுவனத்தின்கீழ் கிளாசிக் 350 பைக்கிற்கான போட்டியாளர் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, அந்த பைக்கில் 400 சிசி திறனுடைய எஞ்ஜின் இடம்பெறலாம் என யூகிக்கப்படுகின்றது.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

அதேசமயம், ஒரு சில தகவல்கள் பஜாஜ் நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த பைக்குகளில் ஒன்றான டோமினார் மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்களுடன் இந்த பைக் வெளிவரலாம் என கூறுகின்றன. அதாவது, டோமினார் பைக்கில் இடம்பெற்றிருக்கும் 373.3 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் இடம் பெற இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றது.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

ஆனால், இப்போது வரை இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் பஜாஜ் வழங்கவில்லை என்பதை நாம் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும். அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் அறிக்கை அல்லது அதன் வலை தளப்பக்கத்தின் வாயிலாக விரைவில் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா?

ஏற்கனவே, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சந்தையில் அதிக போட்டி நிலவி வருகின்றது. இந்த நிலையிலேயே பஜாஜும் கூடுதல் போட்டியை ஏற்படுத்த தயாராகி வருகின்றது. அதேசமயம், என்னதான் சந்தையில் போட்டிகள் உருவாகினாலும் ராயல் என்ஃபீல்டிற்கு என தனிப்பட்ட டிமாண்ட் எப்போதுமே குறையாமல் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பாரம்பரிய தோற்றம், அந்நிறுவனத்திற்கு உரித்தான சைலென்சர் ஒளி உள்ளிட்டவற்றிற்கு பரம ரசிகர்கள் இருக்கின்றனர். ஆகையால், இதன் சந்தையை பதம் பார்ப்பது என்பது கேள்விக் குறிதான்.

Most Read Articles

மேலும்... #பஜாஜ் #bajaj auto
English summary
Bajaj Register New Trademark name 'Neuron': Is that Rival Of Royal Enfield Classic 350. Read In Tamil.
Story first published: Sunday, October 4, 2020, 9:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X