1.9 விநாடிகளே போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு!

வெறும் 1.9 விநாடிகளில், மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை தொடுமளவிற்கு மின்சார பைக் ஒன்று கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பேலிஸ்டிக் சைக்கிள்ஸ் நிறுவனம் உலகின் அதிக சக்தி வாய்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளது. பெயர்கூட வைக்கப்படாத அந்த வாகனம் ஓர் எலெக்ட்ரிக் பைக்காகும். இது, வெறும் 1.9 நொடிக்களுக்குள்ளாகவே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை தொடும் திறனைக் கொண்டிருக்கின்றது.

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

ஆனால், இதன் உச்சபட்ச வேகம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அதேசமயம், இதன் பிக்-அப் ஸ்பீடு என்பது புல்லட் ரயிலையே மிஞ்சுமளவிற்கு இருக்கின்றது. எனவே, பலர் இது உண்மையான பைக்தான என்ற வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

அதேசமயம், இந்த பைக்கின் தோற்றமும் நம்பக் கூடியதாக இல்லை. ஆம், இந்த இருசக்கர மின்சார வாகனம் பார்ப்பதற்கு ஹாலிவுட் திரைப்படங்களில் காட்சியளிக்கும் டம்மி வாகனத்தைப் போன்று காட்சியளிக்கின்றது.

ஆனால், இது உண்மையான பைக் என்பதே நிதர்சனமான உண்மை. இந்த எலெக்ட்ரிக் பைக் இதற்கு முன்பு மின்சார வாகன உலகம் கண்டிாரத வகையிலான லோவ் ரைடர் க்ரூஸர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

இந்த தோற்றமே நம்மில் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த வகையிலான க்ரூஸர் பைக்குகளுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு உண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் காரணத்தினாலயே பேல்லிஸ்டிக் நிறுவனம், இந்த மின்சார வாகனத்தை தனித்துவமான ஸ்டைல் மற்றும் ஆச்சரியமிக்க திறனில் உருவாக்கியிருக்கின்றது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

பேலிஸ்டிக் ஓர் வாகனங்களை கஸ்டமைஸ் நிறுவனம் ஆகும். இது புதிய வாகனங்களை உருவாக்கும் நிறுவனமல்ல. எனவே, இந்த நிறுவனத்திற்கு புதிய பெயரிடப்படாத அதி-திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்குவதில் பெயரளவும் சிக்கல் ஏற்படவில்லை. ஏனென்றால், தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அது மற்ற நிறுவனங்களிடம் இருந்தே பெற்றிருக்கின்றது.

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

ஆகையால், சொந்த தயாரிப்பில் ஒரு உடற்கூற்றைக்கூட அந்த நிறுவனம் தயாரிக்கவில்லை. அதாவது, பேட்டரி முதல் எஞ்ஜின் வரையிலான அனைத்து பாகங்களையும் வெளி சந்தையில் இருந்தே அது பெற்றிருக்கின்றது. எனவேதான் இது பிரத்யேக மாடலாக உருவாகி நிற்கின்றது.

MOST READ: ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

ஆனால், இந்த எலெக்ட்ரிக் க்ரூஸருக்கான ஃபிரேமை மட்டும் சொந்த முயற்சியில் அது கட்டமைத்துள்ளது. இதனாலயே மின்சார பைக் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இதற்காக அலாய் மற்றும் ஸ்போக்ஸ் இல்லாத ரிம் மட்டுமே இருக்கின்ற வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை நேரடியாக மின் மோட்டாருடன் இணைந்து உச்சபட்ச வேகத்தை வெளிப்படுத்துகின்றது.

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

மேலும், மின்சார பைக்கின் வெளிப்புறத் தோற்றத்திற்காக அலுமினியத்தாலான பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது மிகவும் உறுதியான பேனல் ஆகும். அவ்வளவு எளிதில் அதனை சேதப்படுத்த முடியாது.

MOST READ: 3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

இதுமாதிரியான எக்கச்சக்க பிரம்மிப்பை ஏற்படுத்தும் உடற்கூறுகளை பேல்லிஸ்டிக் நிறுவனம் இந்த மின்சார பைக்கிற்காக பயன்படுத்தியிருக்கின்றது. எனவேதான் அமெரிக்கர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை இது ஏற்படுத்தியுள்ளது.

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

அமெரிக்கர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மின்வாகன பிரியர்களையும் இந்த பைக் கவர்ந்துள்ளது. ஆனால், இதனை பேல்லிஸ்டிக் நிறுவனம் முன்மாதிரி மாடலாக உருவாக்கியுள்ளது. ஆகையால், இது இப்போதைக்கு பயன்பாட்டிற்கு கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. இருப்பினும், எதிர்காலத்தில் ஆர்டரின் பேரில் இம்மாதிரியான வாகனங்களை அந்நிறுவனம் கஸ்டமைஸ் செய்து வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1.9 விநாடி மட்டும் போதும் 100 கிமீ வேகத்தில் பறக்கலாம்... மின்னலின் வேகத்திற்கு டஃப் கொடுக்கும் ஸ்பீடு...

இதற்காகவே, நாக்கை சப்புகொட்ட வைக்கும் ரகத்தில் இந்த மின்சாரத்தை பேல்லிஸ்டிக் வடிவமைத்துள்ளது. இந்த நிறுவனம் உலக நாடுகள் பலவற்றில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல இதுமாதிரியான நடவடிக்கையில்தான் தற்போது களமிறங்கியிருக்கின்றன.

Most Read Articles

English summary
Ballistic Cycles Revealed Fasted Low Rider Electric Bike. Read In Tamil.
Story first published: Wednesday, May 27, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X