மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

எக்கசக்க அம்சங்களுடன் பேட்ஆர்இ நிறுவனத்தின் ஜிபிஎஸ்ஐஇ மாடல் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தாலும், அதைப் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளாமல் உலக நாடுகள் சில மெல்ல இயங்க ஆரம்பித்துள்ளன. இது வழக்கத்திற்கு மாறான இயக்கமாகவே உள்ளது. அதாவது கொரோனா அச்சம் அவர்களின் கண்களில் இருப்பதை உணர முடிகின்றது.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

இருப்பினும், பொருளாதாதரத்தை கருத்தில் சில நிறுவனங்களுக்கு மட்டும் அதிகபட்ச கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

இதே நிலையில்தான் தற்போது இந்தியா உள்ளது. அதாவது, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக நான்காம் கட்ட ஊரடங்கின் உத்தரவின்போது கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டன.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

இதனால், பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஆட்டோமொபைல்ஸ்துறை புத்துயிர் பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, புது முக வாகனங்களின் அறிமுகமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

அந்தவகையில், பேட்ஆர்இ நிறுவனம் அதன் புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய மின்சார ஸ்கூட்டரை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஜிபிஎஸ்ஐஇ என்ற பெயரை அந்நிறுவனம் வைத்துள்ளது. ரூ. 64,990 என்ற விலையில் இது விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

MOST READ:உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

இந்த மின்சார ஸ்கூட்டரில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மென்பொருளை மையமாகக் கொண்டு இயங்கும் இணைப்பு தொழில்நுட்பம் (connected features) மிகவும் கவரும் அம்சமாக உள்ளது. இந்த அம்சத்திற்கு இணைய வசதிக் கொண்ட ஓர் சிம் கார்டு முக்கிய தேவையாக உள்ளது.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

இதனை இணைப்பதன் மூலம் பல்வேறு வசதிகளை நம்மால், நம்முடைய ஸ்மார்ட்போன் வாயிலாகவே பெற முடியும்.

உதாரணமாக, நேரடி ஜிபிஎஸ் டிராக்கிங், ரிமோட் கன்ட்ரோல், ஜியோஃபென்சிங் மற்றும் பாதுகாப்பான பார்க்கிங் உள்ளிட்டவற்றை நம்மால் பெற முடியும்.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

இதுமட்டுமின்றி, உரிமையாளர் அல்லாத ஓர் நபர் இந்த ஸ்கூட்டரை தொட நேர்ந்தால் அது செல்போன் செயலி மூலம் நமக்கு எச்சரிக்கையை வழங்கும். தொடர்ந்து, டோவ் செய்ய நேர்ந்தாலும் அது நமக்கு எச்சரிக்கை ஒலியை வழங்கும்.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

இந்த வசதியால் வாகனம் திருட்டுபோகும் என்ற கவலை தவிர்க்கப்படும். இதுமட்டுமில்லாமல் கிராஷ் அலர்ட் மற்றும் ஸ்கூட்டரின் தற்போதைய நிலை உள்ளிட்டவையும் இணையத்தின் வாயிலாக உடனுக்குடன் ஆப்-பில் வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

மேலும், அதிக வேகத்தை எட்டினாலும்கூட எச்சரிக்கை செய்யும் அலாரம் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவையனைத்தையும் செல்போன் ஆப் அல்லது இணையத்தின் வாயிலாக உடனுக்குடன் அதன் உரிமையாளரால் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பான விஷயமாக உள்ளது.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

தொழில்நுட்பத்தில் மட்டுமில்லைங்க இதன் மின் மோட்டார் திறனும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. ஆம், பேட்ஆர்இ ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டரில் 250 வாட் திறனுடைய பிஎல்டிசி மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் சக்தியைக் கொண்டுள்ளது.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

மின் மோட்டாருக்கு தேவையான திறன் வழங்குவதற்காக 48 வோல்ட் 24ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ வரை செல்ல முடியும். 12 கிலோ எடையுள்ள இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரம் ஆகும். இதனை 2,000 முறை சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும் என பேட்ஆர்இ உறுதியளித்துள்ளது.

மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டர் தற்போது தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் உபி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் மூலமாக இந்த மின்சார ஸ்கூட்டரை ஆர்டர் செய்து பெற முடியும் என பேட்ஆர்இ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
BattRE GPSie Electric Scooter Launched In India Price Rs. 64,990 Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X