இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

பேட்டரி எலக்ட்ரிக் மொபைலிட்டி ப்ரைவேட் நிறுவனம், பேட்டரி ஐஒடி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் ரூ.80,000 ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக பெரிய சிறப்பம்சமாக இணையத்தள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தால் 'இண்டர்நெட் கனெக்டட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், அமேசான் இந்தியா நிறுவனத்தின் இணையத்தள சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

இதன் மூலம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை கணிசமாக அதிகரிக்க முடியும் என தயாரிப்பு நிறுவனமான பேட்டரி நம்பிக்கை கொண்டுள்ளது. ஏனெனில் இணையம் இன்று அனைத்து விதமான வர்த்தக செயல்பாட்டிற்கும் மிக முக்கிய மூல ஆதாரமாக செயல்படுகிறது.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

இந்தியாவில் கடை வீதிக்களுக்கு செல்வது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. குறிப்பாக நகர்புறங்களில் வாழும் பெரும்பாலானோர் தங்களது அனைத்து தேவைகளையும் ஸ்மார்ட் போனிலேயே முடித்து கொள்கின்றனர். இந்த வகையில் தங்களுக்கு தேவையான வாகனங்களையும் இணையத்திலேயே தேர்வு செய்ய முன் வருவார்களாக என்பது சந்தேகமே.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

தினந்தோறும் இணையத்திலேயே தனது முழு ஷாப்பிங்கையும் மேற்கொள்வோர்க்கு, பேட்டரி நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி நிச்சயம் சந்தோஷத்தை கொடுக்கும். இத்தகையவர்களை டார்க்கெட் செய்து தான் இந்நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

சந்தையில் நிலவிவரும் போட்டியை சமாளிக்கும் விதமாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யவும் பேட்டரி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இத்தகைய ஹோம் டெலிவிரி விஷயங்களில் இந்நிறுவனம் தற்போதைக்கு தலையிடாது.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

ஏனெனில் பேட்டரி நிறுவனம் சந்தையில் தற்போது தான் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஸ்கூட்டரை பற்றிய அனைத்து டேடா தகவல்களையும் பெற, உரிமையாளர் தனது ஸ்மார்ட் போனை, பேட்டரி ஐஒடி ஸ்மார்ட் ஸ்கூட்டருடன் இணைத்தாலே போதுமானது.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

பெரும்பாலான உலக நாடுகள் அனைத்திலும் மிக பெரிய சந்தையை கொண்டுள்ள அமேசான் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எவ்வாறான சலுகைகளை வழங்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் இணையத்தள சந்தை மூலமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுவது மிக கடினமான காரியமாகும்.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

இந்த ஐஒடி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நாவிகேஷன் அசிஸ்ட், ரைட் ஸ்டேடிஸ்டிக்ஸ், வாய்ஸ் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய செயலி (app), ஸ்கூட்டர் திருடுப்போகாமல் தடுக்க அலாரம் மற்றும் லாக், எஸ்ஒஎஸ் அலார்ட்ஸ், (அடுத்த ஸ்லைடை பார்க்க)

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

மொபைல் போனில் வரும் அழைப்புகளை ஒட்டுனருக்கு அலார்ட் செய்யும் வசதி, ஏஐ பரிந்துரையின்படி அமைக்கப்பட்ட ரைட் பேட்டர்ன் மற்றும் இணையம் மூலமாக சர்வீஸ் கோரிக்கைகளை அனுப்புதல் மற்றும் சர்வீஸ் பதிவுகளை பெறுதல் உள்ளிட்ட தற்போதைய தலைமுறையினருக்கு மிகவும் ஏற்ற நவீன தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மெதுவாக அதிகரித்து வருகிறது. இந்திய அரசாங்கமும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக ஃபேம்2 திட்டத்தை வகுத்துள்ளது.

இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...

ஏற்கனவே கூறியதுபோல், பேட்டரியின் இந்த ஐஒடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.79,999 விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையில் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களின் ஒரு வருடத்திற்கான சந்தா தொகையும் அடங்கும். ஆனால் ஒரு வருடத்திற்கான சந்தா தொகை எவ்வளவு என்பது தெரியவரவில்லை.

Most Read Articles
English summary
BattRE Launches IOT e-scooter In India
Story first published: Tuesday, January 28, 2020, 19:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X